Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மது அருந்தும் மா காவால்கா

Advertiesment
மது அருந்தும் மா காவால்கா
இதுவரை பைரவருக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைப் பார்த்துள்ளோம். ஆனால் இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் நாம் பார்க்கப் போவது, மா காவால்கா தேவியின் கோயிலில் அம்மனுக்கு மதுவை நைவேத்தியமாகப் படைப்பதைத்தான்.

ஒரு பெண் தெய்வத்திற்கு மதுவை நைவேத்தியம் செய்வதாநாம் கேள்விப்படுவதே இதுதான் முதல் முறை.

சட்லாம் நகரத்தில் இருந்து 32 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மா காவால்கா கோயி‌பல ஆண்டுகளாக மக்க‌ளா‌லவ‌ழிபாடசெ‌ய்ய‌ப்ப‌ட்டவரு‌கிறது.

இந்த கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், கோயிலில் உள்ள மா காவால்கா, மா காளி, கால பைரவரின் சிலைகளுக்கு மதுவைத்தான் நைவேத்தியமாகப் படைக்கின்றனர் ப‌க்த‌ர்க‌ள்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாங்கி வரும் மது, ஒரு கோப்பையில் ஊற்றப்பட்டு அது கடவு‌் ‌திருவுருவ‌ச் ‌சிலைகளின் வாய்ப்பகுதியில் வைக்கப்பட்டதும் கோப்பை கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிடுகிறது. இவை அனைத்தும் பக்தர்களின் முன்னிலையிலேயே நடக்கின்றன.

இந்த கோயிலில் பூசாரி பண்டிட் அம்ரித்கிரி கோஸ்வாமி கூறுகையில், இந்த கோயில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும், மாயமான முறையில் இந்த சிலைகள் இங்கு நிறுவப்பட்டன என்றும் கூறினார். மூன்று சிலைகளும் மது அருந்துவது முற்றிலும் உண்மையான விஷயம் என்றும் கூறுகிறார்.

பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து இறைவனுக்கு மதுவை காணிக்கையாக அளித்து, தங்களது விருப்பங்களை கோ‌ரி‌க்கையாவை‌க்‌கி‌ன்றன‌ர்.

ரமேஷ் என்ற பக்தர், மு‌ன்பதா‌னஇ‌ந்கோ‌யிலு‌க்கவ‌ந்போததன‌க்கு‌ககுழ‌ந்தை ‌பிற‌ந்தா‌லஆடு வெட்டி, தனது பிள்ளைக்கு மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவே‌னஎ‌ன்றவே‌ண்டி‌ககொ‌ண்டதாக‌கூறினார்.

த‌ற்போது தனக்கு குழந்தை பிறந்து‌ள்ளதாகவு‌ம், அத‌ற்கு நேர்த்தி கடன் செலுத்தவே இங்கு வந்துள்ளதாகவும் கூறுகிறார்.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும், சிறிய பாட்டில்களில் மது பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறினால் வெறும் பாதத்தில் நடந்து வருவதாகவும், ஆடு போன்றவற்றை பலி கொடுப்பதாகவும் வேண்டிக் கொள்கின்றனர்.

ஆடி அமாவாசை மற்றும் நவராத்திரி தினங்களில் இந்த கோயிலில் சிறப்பான பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகின்றனர். சிறப்பு பூஜைகளின் போது பலருக்கு சாமி வந்து ஆடுவதையும் பார்க்க முடிகிறது.

உண்மையிலேயே இங்குள்ள சிலைகள் மதுவை குடிக்கின்றனவா அல்லது இதெல்லாம் மனிதர்களின் சித்து விளையாட்டா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? எங்களுக்கு எழுதுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil