Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித உடலில் தோன்றும் சாய்பாபா!

மனித உடலில் தோன்றும் சாய்பாபா!
பெண் ஒருவரின் உடலில் புகுந்து பக்தர்களின் குறைகளை போக்குகிறார
webdunia photoWD
ஸ்ரீ சாய்பாபா- என்பதை நீங்கள் எங்காவது கேள்விப்பட்டதஉண்டா? மனிதர்கள் உடலில் கடவுள் புகுந்து விடுவார் என்பதைத் தான் இதுவரை நாம் அறிந்துள்ளோம். அதே அற்புதத்தை சாய்பாபாவும் நிகழ்த்துவது வியப்பாகத் தான் இருக்கும்.

இந்த வாரம் 'நம்பினால் நம்புங்கள்' பகுதியிலநாம் பார்க்கப்போவது மத்தியப் பிரதேச மா‌நில‌ம் தேவாஸில் இருக்கும் சாய்பாபா கோயிலைத்தான்.

இந்தக் கோயிலின் பெண் பூசாரி இந்துமதி என்பவரின் மருமகள் ஆஷா துர்கானேவின் உடலுக்குள்தான், சாய்பாபா புகுந்து மக்களின் குறைகளை போக்கி வருவதாகக் கூறுகிறார்கள் இப்பகுதி மக்கள்.

கடந்த 15 ஆண்டுகளாக இது நடக்கிறது. ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஆஷாவின் உடலுக்குள் பாபா புகுந்துவிடுகிறார். அதன் பிறகு அப்பெண்ணின் உடல் மற்றும் குரலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவரது நடவடிக்கை ஆணைப் போல் மாறுகிறது. புகை பிடித்தபடியே பக்தர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதற்கான தீர்வையும் கூறுகிறாராம்.

இதுபற்றி கோயிலின் பக்தர் ரகுவீர் கூறுகையில், "பாபா மீது கண்மூடித்தனமாக எனக்கு நம்பிக்கை உள்ளது. உண்மையான உணர்வுடன் வரும் பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன. ஆனால் பாபா மீது உண்மையான பக்தி தேவை" என்றார்.

மற்றொரு பக்தர் கூறும்போது, “ 10 ஆண்டுகளாக பாபா கோயிலுக்கு வருகிறேன். இந்த இடம் அமைதியைத் தருகிறது. இங்கு வந்தால் மக்களுக்கு ஏதோவொன்று கிடைக்கிறது என்பது உண்மை. ஆகையால் பக்தர்கள் குவிகிறார்கள்" என்றார்.

தனது பல்வேறு மனித நேயப் பணிகள் மூலம் மக்களால
webdunia
webdunia photoWD
சாய் பாபா நினைவுகூறப்பட்டு வருகிறார். அமைதியையும், சகோதரத்துவத்தையும் போதிக்கும் பாபாவின் கொள்கைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. ஆனால், மனித உடலுக்குள் பாபா வருகிறார் என்பது ஆச்சரியமாகத் தான் உள்ளது. இது பக்தியின் அடையாளமா? அல்லது மூட நம்பிக்கையா? உங்கள் கருத்து என்ன? எங்களுக்கு எழுதுங்கள்!

Share this Story:

Follow Webdunia tamil