Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மன நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் நைமாதா!

மன நோ‌ய்களை‌த் ‌தீ‌ர்‌க்கு‌ம் நைமாதா!
மருத்துவர்களால் தீர்க்க முடியாத வியாதிகளை தீர்ப்பார், மன ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவார், எதிர்சக்திகளால் பீடிக்கப்பட்டவர்களை மீட்டுக் காப்பாற்றுவார் என்றெல்லாம் மக்களால் போற்றப்படும் ஒரு அம்மன் கோயிலை இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்புர் மாவட்டத்தில் உள்ள பிரோதாபாத் எனும் கிராமத்தில் உள்ளது நைமாதா கோயில்.

webdunia photoWD
இக்கோயிலுக்கு மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஏராளமானவர்கள் வருகின்றனர். 5 செவ்வாய் கிழமைகள் தொடர்ந்து இக்கோயிலுக்கு வந்தால் அவர்களுடைய நோய் குணமாகிவிடுகிறது என்று இங்கு வந்து செல்லும் ஏராளமான பக்தர்கள் கூறுகின்றனர்.

இக்கோயிலில் குடிகொண்டுள்ள நைமாதா எந்த நோயையும் - மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோயாக இருந்தாலும், வாழ்க்கையில் தீராத நோயால் அவதிப்படுபவர்களையும் குணப்படுத்தி காப்பாற்றுகிறார் என்று கூறுகின்றனர்.

இக்கோயிலுக்கு வருபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் எந்த மருத்துவரிடமும் சிகிச்சைக்கு செல்லக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்படுகிறது. இம்மாதாவின் அருளைப் பெற்று குணமடைய வரும் நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.

சிலர் வெள்ளை நிறத்தில் உள்ள உணவுகளை உண்ணாமல் தவிர்க்கின்றனர். அதேபோல கருப்பு ஆடை அணிவது தெய்வத்திற்கு உகந்தது அல்ல என்று கூறும் பக்தர்கள், இதை எல்லாம் செய்தால் நோய் மேலும் உக்கிரமாவதாகக் கூறுகின்றனர்.

webdunia
webdunia photoWD
இக்கோயிலுக்கு அருகே சப்ஜான் பாய் என்ற பெண்மணி ஒரு தனி மடத்தை நடத்தி வருகிறார். தனது உடலில் நைமாதா வருவதாகவும், அதன் மூலம் தன்னை நாடி வரும் நோயாளிகளை தன்னால் குணப்படுத்த முடியும் என்றும் கூறி வருகிறார்.

ஆவி பீடித்துள்ளதாக கூறப்படும் நோயாளிகள் சப்ஜான் பாயை அணுகுகின்றனர். இவர் குஷ்டத்தையும் குணப்படுத்துவேன் என்கின்றார். பிள்ளை இல்லா குறையையும் தீர்ப்பேன் என்கின்றார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பக்தர்களை வேறு எந்த மருத்துவர்களிடமும் சென்று பார்த்தாலும் மாதாவிற்கு கோபம் வந்து விடும். பிறகு நீங்கள் செத்து விடுவீர்கள் என்று சப்ஜான் பாய் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நமது அன்றாட வாழ்க்கை முழுமையாக விஞ்ஞானம் என்றாகி விட்ட இந்நாளில், சிறிய பெரிய உடல் பிரச்சினைகளுக்கு எல்லாம் மருத்துவர்களிடம் தான் செல்கின்றோம். ஆனால் பிரோதாபாத் கிராமத்து மக்கள் எவ்வளவுக் கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டாலும் நைமாதாவிடம் தான் வருகின்றனர்.

மருத்துவர்களை அணுகுவதில்லை. இதனை நம்பிக்கை என்பீர்களா, மூட நம்பிக்கை என்பீர்களா?
உங்கள் கருத்தை எங்களுக்கு எழுது‌ங்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil