Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆண் குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!

ஆண் குழந்தை பிறக்க சிகிச்சை அளிக்கும் மருத்துவர்!
, செவ்வாய், 15 ஏப்ரல் 2008 (14:24 IST)
இந்த நாகரீகக் காலத்தில் பெண்களும் ஆண்களைப் போலத்தான் வளர்க்கப்படுகிறார்கள். ஆனாலும் இன்னும் சில குடும்பங்களில் ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

webdunia photoWD
ஆண் குழந்தை வேண்டி மந்திரவாதிகள் மற்றும் ஏமாற்றுக்காரர்களை நாடுவதும், பெண் குழந்தையை பிறப்பதற்கு முன்பே கொல்வது போன்ற கொடிய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில் இந்த பிரச்சனையைத்தான் உங்கள் முன் வைக்கிறோம். நாங்கள் அறிமுகம் செய்து வைக்கப் போகும் நபர் அளிக்கும் மருந்தை சாப்பிட்டால் ஆண் பிள்ளை பிறக்குமாம்.

பவன் குமார் அஜ்மேரா என்ற ஆயுர்வேத மருத்துவரான இவர் அளிக்கும் மருந்து, பிறக்கும் குழந்தையின் பாலினத்தையே நிர்ணயிக்கும் சக்தி கொண்டது என்கிறார்.

இந்தூரில் காந்திநகர் பகுதியில் அமைந்திருக்கும் இவரது மருத்துவமனையின் சுவர் முழுவதும் இவரது சாதனைகள் விளக்கப்பட்டிருக்கின்றன.

webdunia
webdunia photoWD
ஒரே ஒரு பெண் குழந்தை இருப்பவர்களுக்கு மட்டுமே இவர் ஆண் குழந்தைக்கான மருந்தினை அளிக்கிறார். ஆண் குழந்தைப் பெறுவதற்கான மருந்தினை வாங்க வேண்டுமானால், அந்த பெற்றோர்கள் தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் அளிக்க வேண்டும்.

இவரது சிகிச்சையைப் பெற்ற 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இவர் அளிக்கும் மருந்தினை பெண்கள் பாலுடன் சேர்த்து உண்ண வேண்டுமாம்.

எத்தனையோ குடும்பங்களில் ஆண் வாரிசுக்காக ஏங்குகிறார்கள். நிறைய பேர் இந்த மருத்துவ முறையை நம்புகிறார்கள். ஆண் குழந்தைக்காக இங்கு வரும் பெற்றோர்களுக்கு எனது சிகிச்சை முறையின் பலனாக ஆண் குழந்தை கிடைக்கிறது.

webdunia
webdunia photoWD
மருத்துவமனைக்கு வந்துள்ள மோகினி உபாத்யாய் என்பவர் இதுபற்றிக் கூறுகையில், எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடுத்ததாக ஆண் குழந்தை வேண்டும் என்று விரும்பினேன். இந்த மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். இங்கு சிகிச்சைப் பெற்ற பின்னர் எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றார்.

பவன் குமாரின் இந்த செயலைப் பெரும்பாலான மருத்துவர்கள் கண்டிக்கிறார்கள். இது பற்றி குழந்தைகள் நல மருத்துவர் முகேஷ் பிர்லா நமது வெப்துனியாவிற்கு அளித்த பேட்டியில், இது மக்களை ஏமாற்றும் செயல். இயற்கையாகப் பிறக்கும் குழந்தையின் பாலினத்தை நிர்ணயிக்க முடியாது என்று கூறுகிறார்.

பவன் குமாரின் மருத்துவத்தை அங்குள்ள பலரும் நம்புகிறார்கள். சிகிச்சை என்று பெயரளவில் சொல்லப்படும் இது ஒரு வியாபாரம்தான். பலரும் ஆண் குழந்தை வேண்டி இங்கு வருகிறார்கள். இதனால் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துவிடும்.

webdunia
webdunia photoWD
சட்டத்திற்குப் புறம்பான இந்தச் செயலை தடுக்க யாரும் முன்வரவில்லை. குழந்தை பிறப்பதற்கு முன்பு அது எந்த பாலினத்தைச் சேர்ந்தது என்று கண்டறிந்து சொல்வதே நம் நாட்டில் குற்றம் என்றால் இதை எப்படி அரசும், மக்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்கு தெரிவியுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil