Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தன்னைக் கடவுள் என்று கூறிக்கொண்டு கத்தியால் அறுவை சிகிச்சை செய்பவரின் கதை!

தன்னைக் கடவுள் என்று கூறிக்கொண்டு கத்தியால் அறுவை சிகிச்சை செய்பவரின் கதை!

Webdunia

, திங்கள், 26 நவம்பர் 2007 (19:28 IST)
"நமது நாடு முட்டாள்களால் நிரம்பியுள்ளது. நானும் அதில் ஒருவன். ஏனென்றால், தன்னை கடவுள் என்று சொல்லிக் கொள்பவனின் சூழ்ச்சி வலையில் சிக்கிக்கொண்டவன்" என்று கூறினார் மத்தியப் பிரதேச மாநிலம் செம்லியா சாவ் கிராமத்தைச் சேர்ந்த வாகாடி என்பவர்.

தன்னை கடவுள் என்று பிரகடனம் செய்துகொண்டு ஏமாற்றி வரும் சந்தியநாம் வித்யால்தாஸ் என்பவரிடம் தான் ஏமாந்த கதையை இவர் எங்களிடம் கூறினார்.

webdunia photoWD
ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாடா மாவட்டத்தில் உள்ள சீன்ச் என்ற கிராமத்தில் அதீத சக்திகளைப் பெற்ற ஒருவர் உள்ளார் என்று சுரேஷ் வாகாடி கேள்விப் பட்டதில் இருந்து இக்கதை துவங்குகிறது. தனது கிராமத்தில் இந்த நபரைப் பற்றிய குறுந்தகடுகளும், கைப்பிரதிகளும் விநியோகிக்கப்பட்டபோது, சத்தியநாம் வித்யால்தாஸைப் பற்றி சுரேஷ் வாகாடி அறிய வந்துள்ளார்.

சாதாரண கத்தியைக் கொண்டு சிகிச்சை அளிக்கும் சத்தியநாம் வித்யால்தாஸ், எய்ட்ஸ், புற்றுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்த முடியும் என்றும், அதற்காக எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை என்றும், அந்தக் கைப்பிரதிகள் கதை கூற, அதை நம்பி சிகிச்சைக்குச் சென்ற சுரேஷ் வாகாடி ஏமாற்றப்பட்டுள்ளார்.

சுரேஷ் வாகாடியின் ஏமாற்றத்திற்கு அடிப்படையான அந்தக் குறுந்தகட்டை நாங்களும் கண்டோம். அதில் சத்தியநாம் கடவுள் என்றே பெருமைப்படுத்தப்பட்டுள்ளார். காவல் துறையினர் போல ஆடை அணிந்த பலர் அவரைச் சுற்றி பாதுகாப்பாக நின்றிருந்தனர். அங்கு செய்துள்ள ஏற்பாடுகளெல்லாம் அப்பாவி கிராம மக்களை மிகச் சுலபமாக ஏமாற்றுபதைப் போல செய்யப்பட்டிருந்தது. அந்த குறுந்தகட்டில்¨ உள்ள சில பகுதிகளை நாங்கள் வீடியோவில் தந்துள்ளோம். அந்த வீடியோவை மிகக் கவனமாகப் பாருங்கள். அறுவை சிகிச்சையின் போது இந்த நபர் செய்யும் ஏமாற்று வேலையை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.

webdunia
webdunia photoWD
கத்தியை வைத்து நோயாளியின் மீது லேசாக கீறல் போட்ட பின்னர் அவருடைய உடலில் இருந்து ஒரு சதைப் பிண்டத்தை எடுத்து வெளியில் காட்டி நோய் பீடித்திருந்த அந்தப் பகுதியை தான் வெளியே எடுத்துவிட்டதாக காட்டுகிறார். ஆனால், அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரே ஒரு சதைத் துண்டை இவர் கையில் மறைத்து வைத்துக்கொண்டே நோயாளியின் உடம்பில் கத்தியால் கீறுகிறார். பிறகு அவருடைய உடலில் எடுக்கப்பட்டது போல காட்டுகிறார். இதுதான் இவர் செய்யும் ஏமாற்றுவேலை.

webdunia
webdunia photoWD
இந்த அறுவை சிகிச்சையை இவர் செய்யும் நேரம் அசாதாரணமானது. நள்ளிரவு ஆரம்பித்து 3 மணி வரை செய்கிறார். இந்த சிகிச்சை செய்யும் போது கதவுகள் மூடப்பட்டிருக்கும். அதற்கு வெளியே அவருடைய மெய்காப்பாளர்கள் காவலிற்கு நிற்பார்கள்.

இவரிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பெண்கள், தங்களுடைய கருப்பை நோய்க்காக சிகிச்சை பெற்றதாகவும், அவர்களில் ஒருவருக்கு கூட குணமாகவில்லை என்றும், மாறாக அவர்களின் நிலை மோசமடைந்ததாக ராஜூ பாய் என்ற பெண்மணி கூறுகிறார். இவரும் இந்தப் போலி ஆசாமியிடம் ஏமாந்தவர்களில் ஒருவராவார்.

வெப்துனியாவிடம் பேசிய ராஜூ பாய், அந்தக் குறுந்தகட்டில் காட்டுவது போல, இவர் கத்தியை வைத்து அறுவை சிகிச்சை ஏதும் செய்யவில்லை என்றும், நோயாளியின் உடலில் கத்தியால் கீறிவிட்டு பிறகு அந்த இடத்தில் ஒருவித சாம்பலை தடவிவிடுவதாகவும், அதன் காரணமாக இவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள் சில நாட்களுக்கு மயங்கிய நிலையிலேயே இருப்பதாகவும் கூறினார். இந்தச் சாம்பலிலும் மயக்கம் அளிக்கக்கூடிய மருந்து எதையும் இந்த ஆள் கலந்திருப்பாரே என்கின்ற சந்தேகம் பலருக்கும் உள்ளதென ராஜூ பாய் கூறினார்.

இதுமட்டுமல்ல, தேங்காயை உடைத்து அதற்குள் இருந்து மலர்களையும், குங்குமத்தையும் இவர் வரவழைத்துக் காட்டுகிறார். இந்த வித்தையெல்லாம் சாதாரண ஆட்களே செய்து காட்டக்கூடியதுதான். ஆனால், விவரம் தெரியாத கிராமத்தினர் இதையெல்லாம் தெய்வீகச் செயல் என்று நம்புகின்றனர். இவரிடம் சிகிச்சைக்கு வந்த சுனில் என்பவர் அப்படிப்பட்ட தேங்காய் ஒன்றை சோதித்துப் பார்த்ததாகவும், அது உடைக்கப்பட்டு 2 பகுதிகளாக ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டதாகவும் கூறினார்.

webdunia
webdunia photoWD
இதுமட்டுமா? எல்லாம் இலவசமாக செய்யப்படுகிறது என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், ஆபரேஷனுக்கு 500 ரூபாய், மருந்துக்கு 300 ரூபாய் என்று அங்குள்ள பாபாவின் ரவுடிகள் பிடுங்கிவிடுவதாகக் கூறினார். தன்னைக் கடவுளாக கூறிக்கொள்ளும் சந்தியநாம் ஒரு மிகப்பெரிய மோசடிக்காரன் என்பதையும், மிக அழகாக திட்டமிட்டு அவன் செயல்படுவதையும் நாங்கள் கண்டுகொண்டோம். இப்படிப்பட்ட ஆசாமிகளை நம்பிவிடாதீர்கள். கடவுளின் பெயரால் இப்படிப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபடும் யாரைப் பற்றியாவது கேள்விப்பட்டால் எங்களுக்கு தெரிவியுங்கள்.

இந்த கதைக்கான குறுந்தகட்டை அந்த பாபாவிடம் சிகிச்சை பெற்ற நோயாளிகள்தான் அளித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil