Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடரியை கொண்டு நோயை அறியும் அதிசய பாபா

கோடரியை கொண்டு நோயை அறியும் அதிசய பாபா

Webdunia

, ஞாயிறு, 30 செப்டம்பர் 2007 (16:27 IST)
புராணங்களும், பழங்கதைகளும், புரியாத புதிர்களையும் கொண்டது நமது நாடு. யோகம், மந்திர-தந்திரம் மற்றும் மூலிகைகள் கொண்டு தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தி விடுவதாக உரிமை கோரும் ஆசாமிகளும் உள்ளனர். ஆனால் சில சமயங்களில் இத்தகைய ஆசாமிகள் கூறும் விஷயங்கள் கட்டுக் கதைகள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.

இதுபோன்று உயரிய முன்னுரிமைகளைக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் மோசடி நபர்கள் பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். நம்பினால் நம்புங்கள் பகுதியில் இம்முறை அதுபோன்ற ஒரு பாபாவை நாம் பார்க்கப்போகிறோம்...அவர் மோசடிப் பேர்வழியா இல்லையா என்பது வாசகர்களின் விருப்பம்... எங்களை பொறுத்தவரை அவரது இடத்திற்கு சென்று நாங்கள் பார்த்த விஷயங்களை அப்படியே கொடுக்கிறோம்...

ிரியம்பக் கிராமத்திற்கு நாங்கள் செல்லும்போது "ஃபார்ஷி வாலே பாபா" அல்லது "கோடாரிக்கார பாபா" என்று அழைக்கப்படும் ரகு நாத் தாஸ் என்பவரைப் பற்றி கேள்விப்பட்டோம்.

webdunia photoWD
இவர் நாசிக்-திரியம்பக் சாலையில் வசித்து வருகிறார். நோயாளிகளின் தலையில் கோடாரியை வைத்துப் பார்த்து எயிட்ஸ், கேன்சர் உள்ளிட்ட நோய்களைக் கூட கண்டுபிடித்து விடுகிறாராம். இது மட்டுமல்லாது இத்தகைய நோய்களை குணப்படுத்தி விடுவதாக அவர் கூறிக்கொள்கிறார். அவர் கூறுவது உண்மையா... நாம் நம் விசாரணையைத் துவங்கினோம்...

ரகுனாத் பாபாவின் ஆஸ்ரமம் நோக்கி நமது வாகனம் திரும்பியது. ஆஸ்ரமத்தில் நுழைந்தவுடன் மிகப்பெரிய ஹால் ஒன்று தென் பட்டது. நிறையபேர் சிகிச்சைக்காக அங்கு வரிசையில் காத்திருந்தார்கள். படுக்கையில் 40 அல்லது 45 வயது மதிக்கத் தக்க ஒருவர் அமர்ந்து நோயாளி ஒருவரின் தலையில் கோடாரியை வைத்து ஏதோ மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி சிலர் நின்று கொண்டு நோயாளிகள் என்ன மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர்.

webdunia
webdunia photoWD
கோடரியை தலையில் வைத்து ஒரு நோயாளியிடம் அவர் "உங்களது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்கிறது" என்றும் சர்க்கரை இந்த அளவிலிருந்து இந்த அளவில் இருக்கிறது என்றும் கூறியதை கேட்டு அதிர்ந்தோம். மேலும் இவர் கட்டி, புற்று நோய், அல்லது எயிட்ஸ் ஆகிய நோய்களையும் உடனடியாக கண்டுபிடித்துக் கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது உண்மையான விளையாட்டு துவங்கியது... பாபாவின் முன்னால் நின்று கொண்டிருந்த ஒருவர் தனது உடைகளை கழற்றி பாபா முன் போட்டார். உடனே பாபா அந்த துணிகளின் மீது தனது கோடரியை வைத்து உங்களுக்கு இந்த நோய் இருக்கிறது அந்த நோய் இருக்கிறது என்று கூறத்துவங்கினார்.

பிறகு அந்த நோயாளி தனது மனைவியின் புகைப்படத்தை பாபா முன் வைக்க, ோடாரியை புகைப்படத்தின் மேல் வைத்து மனைவியின் நோய்களையும் கூறிவிட்டார் பாபா!

இதுபோன்று சில மணி நேரங்கள் பலருக்கு நோய்களை கணித்து கூறிக்கொண்டிருந்தார். அவருடன் கூட இருந்தவர்களுடன் பேசி, பாபாவை சந்திக்கவேண்டும் என்ற எங்களது விருப்பத்தை தெரிவித்தோம்... தோட்டத்திற்கு வந்தால் பாபாவை தனியாகச் சந்திக்கலாம் என்றார்கள். தோட்டத்தில் பல மூலிகைச்செடிகள் இருந்ததன.

webdunia
webdunia photoWD
ரகுனாத் பாபாவை பொறுத்த வரையில் இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அவர் வியாதிகளைக் குணப்படுத்துவதாகக் கூறுகிறார். இந்த சிகிச்சை முறை எய்ட்ஸ் மற்றும் புற்று நோயையும் குணப்படுத்தும் என்கிறார் அவர். கோடாரி மூலம் நோய்களை அறியும் ரகசியம் என்னவென்று அவரிடம் கேட்டோம்... இந்த கோடாரி அவரது குரு பரிசாக கொடுத்ததாம். பழங்குடி மக்களுடன் தான் நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அவர்களிடமிருந்துதான் மூலிகை மருந்துகள் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் கலையை கற்றுகொண்டதாகவும் கூறினார்.

உங்களது மருந்துகள் நன்றாக வேலை செய்து குணப்படுத்த முடியாத வியாதிகளையும் போக்குகிறது என்றால் அம்மருந்துகளை ஏன் காப்புரிமையின் கீழ் அரசாங்க அங்கீகாரத்துடன் செய்யக்கூடாது என்று கேட்டோம்... அவர் பேச்சை திசைத் திருப்பினார்...

கள்ளிச் செடியிலிருந்து தபீஸ் என்ற ஒன்றை தயாரிப்பதாகவும் இது நோயாளிகளின் நோயெதிர்ப்புச் சக்தியை வளர்க்கிறது என்றும் கூறிய அவர், இந்த மருந்து நோயை அதன் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதாகவும் கூறினார்.

பாபாவுடன் பேசி முடித்த பிறகு நோயாளிகள் என்ன கூறுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்... தனது பெயரை வெளியிட விரும்பாத ஒரு நபர் தனக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்றும், இந்த நோயை குணப்படுத்த முடியாது என்று தனக்குக் தெரியும் என்றும், ஆனால் தனது நண்பர் ஒருவர் இந்த பாபாவை பற்றி கூறியதால் தான் இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

webdunia
webdunia photoWD
அதேபோல் பாலாஜி ஷெகாவத் என்பவர் தனது களை இங்கு அழைத்து வந்துள்ளார். இவரது மகளுக்கு மூளையில் கட்டி. இவரது நண்பர் ஒருவருக்கு மூளைக்கட்டியை பாபா தனது சிகிச்சையால் குணப்படுத்தியதாகக் கூறியதால் தனது மகளையும் சிகிச்சைக்காக இங்கு அழைத்து வந்ததாக அவர் தெரிவித்தார். தனது மகள் குணமடைந்து விடுவாள் என்று அவர் நம்பிக்கையுடன் வந்திருப்பதாக கூறினார்.

ிறையபேர் வந்து சிகிச்சை பெற்றாலும், இவரது நம்பகத்தன்மை மீது சந்தேகம் ஏற்படும் சில சமாச்சாரங்களை நாங்கள் கண்டுபிடித்தோம். பாபா தனது வயதை 70 என்று எங்களிடம் குறிப்பிட்டார். ஆனால் அவருக்கு வயது 40 முதல் 45 தான் இருக்கும்போல் தெரிகிறது. ஆனால் இவருக்கு 21 வயதில் மகன் இருக்கிறார். இது குழப்பமாகவே இருந்தது. மேலும் நோயாளிகள் எல்லோருக்கும் ஒரே மருந்தையே கொடுத்துக் கொண்டிருந்தார். ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் ஒரு மருந்து எப்படி எய்ட்சையோ அல்லது கேன்சரையோ குணப்படுத்தும்? அப்பாவி மக்களை ஏமாற்றி நடத்தும் மோசடி வியாபரம் போலவே இது எங்களுக்கு பட்டது.

ரகு நாத் பாபா மீதான குற்றச்சாட்டுகள்...

மூட நம்பிக்கை தகர்ப்புக் குழுவின் தலைவர் டாக்டர். நரேந்திர தபோல்கர், பாபாவை கடுமையாக எதிர்க்கிறார், " பாபா ஒன்றும் படித்த மருத்துவர் கிடையாது, அவர் எப்படி நோயாளிகளை குணப்படுத்த முடியும்? ரகுனாத் பாபாவின் மீது இவர் ஏப்ரல் 2006ல் ஒரு முதல் தகவல் அறிக்கை புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளாராம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை என்கிறார் தபோல்கர்.

சமீபத்தில் நரேந்திர தபோல்கர் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளார். இவரை பொறுத்தவரை அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்பவர்தான் பாபா... 2006ம் ஆண்டு திரியம்பக்கின் மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜேந்திர ஜோஷி பாபா மீது வழக்கு ஒன்றை பதிவு செய்தார். ஆனால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து 15 மாதங்கள் ஆகியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால் மூட நம்பிக்கை தகர்ப்பு அமைப்பு நிர்வாக மட்டத்தில் பாபாவிற்கு எதிராக போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil