நம்ப முடியாத சம்பவங்களில் நாம் அடுத்த கட்டமாக பார்க்கப்போவது, மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள ராலயாதா என்ற கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் சிறுநீரகத்திலும், பித்தப்பையிலும் உருவாகும் கற்களை வாயால் உறிஞ்சியே எடுத்து விடுகிறாராம். இதைக் கேள்விப்பட்டவுடன் அந்த கிராமத்திற்கு நாம் விரைந்தோம்...அங்கு மெதுவே விசாரித்தோம் அவர் பெரும் பீடிகை போட்டு பிறகு சீதாபாய் என்ற அந்த மூதாட்டி இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.சீதாபாய் என்ற அந்த மூதாட்டியைச் சுற்றி நிறையபேர் அமர்ந்திருந்தார்கள். அவரும் தனது சிகிச்சையை தொடங்க ஆயத்தமாயிருந்தார். அப்போது ஒரு சிறுவனை அழைத்து அவனின் பிரச்சனையை கேட்டறிந்தாள். பிறகு வலியிருந்த பகுதியில் வாயை வைத்து உறிஞ்சத் தொடங்கினாள். பிறகு அந்த மூதாட்டி தன் வாயிலிருந்து சில கற்களை ஊதித் தள்ளினாள். கிட்னி கல்லை குணப்படுத்திக் கொள்ள அங்கு நீண்ட வரிசையில் நின்றிருந்த ஆண்களும், பெண்களும் காத்திருந்ததைக் கண்டு அதிசயித்தோம்.
பிறகு நாம் வந்த விவரத்தை சீதாபாயிடம் தெரிவித்தபோது, இந்த சிகிச்சையை தான் 18 ஆண்டுகளாக செய்துவருவதாகக் கூறி பிரமிக்க வைத்தார். இந்த சிகிச்சையை அளிக்கும்போது தான் காற்றில் பல இடங்களில் மிதப்பதை போல் உணர்கிறேன் என்றார். இந்த சிகிச்சைக்கு துர்க்கை தேவியின் அருளே காரணம் என்று ரொம்ப சாதாரணமாக கூறினார்.
சீதா பாய் சிகிச்சை விறுவிறுவென பார்த்துக் கொண்டிருக்கையில் அவருக்கு பின்னால் இருந்த நபர் வந்தவர்களிடம் பழங்கள், கத்தரிக்காய், மற்றும் தக்காளிகளை சாப்பிடுமாறு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அவர் சில மூலிகை மருந்துகளையும் நோயாளிகளுக்கு அளித்துக் கொண்டிருந்தார்.
ராஜஸ்தான், குவாலியர் மற்றும் கான்பூரில் சீதா பாயின் மகிமை ஏற்கனவே பரவியிருந்தது. இவரிடம் சிகிச்சை பெறவந்த திருமதி. பகாவான் தேவி என்ற ஒரு 75 வயது மூதாட்டியை சந்தித்தோம், இந்த வயதில் கல்லை அறுவை சிகிச்சை செய்து எடுக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், அப்போதுதான் மாதாவின் பெயரை கேள்விப்பட்டு இங்கு வந்தேன், சோனோகிராபி ஒன்றை எடுக்குமாறும் எனக்கு மாதா கூறியிருந்தார். சிகிச்சை முடிந்து பார்க்கும்போது கிட்னி கல் மறைந்துவிட்டிருந்தது" என்றார்.மற்றொரு நபரான மனோஜ், இங்கு தான் 2வது முறையாக வருவதாகவும், முதல் முறை சிகிச்சைக்கு பிறகு வலி குறைந்தது. பிறகு அல்ட்ரா சவுண்ட் எடுத்த்ப்பார்த்தபோது முழு குணமடைந்ததை தெரிந்து கொண்டேன் என்றார்.ஒரு பெரிய விஷயத்தை சர்வ சாதாரணமாக செய்து விட்டு எல்லாம் அந்த கடவுள் செயல்தான் என்று சீதாபாய் கூறியபோது தெய்வீக உணர்வு அவரிடம் தெரிந்தது.
ஆனால் விஞ்ஞானம் இதனை ஏற்கிறதா என்பதை அறிய டாக்டர் அஷோக் சவுத்ரி என்பவரை சந்தித்தோம் கல்லை உறிஞ்சி எடுப்பது என்பது நடக்க முடியாத காரியம், கல்லின் மிக நுண்ணிய பகுதிகள் சிறு நீரில் வெளியேறும் அவ்வளவே. மேலும் கல்லை நீக்க மருத்துவம் என்பது உடலில் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தது. எனவே அது சாத்தியமில்லை இல்லை என்று கூறினார்.
ஆனால் சீதா பாயோ, தான் குழந்தையாய் இருக்கும்போதே துர்க்கையின் பக்தை என்றும் துர்க்கைதான் இந்த மகிமையை தனக்கு அளித்தாள் என்றும் கூறுகிறார். விஞ்ஞானமா அல்லது தெய்வீக சக்தியா என்ற புதிர் விடுபடாமல் திரும்பினோம்.