மஹாபாராத போர் நடந்த துவாபார யுகத்தில் பிறந்தவர் அஸ்வத்தாமன். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் போர்க் கலையை கற்று தந்த குரு துரோனாச்சாரியாரின் மகனான இவர், அந்த யுகத்தின் மாவீரர்களில் ஒருவர்.
மரணமற்ற அமரத்துவம் பெற்ற அஸ்வத்தாமன் இப்பொழுதும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது. மஹாபாரதப் போரில் கௌரவர்கள் பக்கத்தில் நின்று துரோனாச்சாரியார் பாண்டவர்களை எதிர்த்துப் போர் புரிந்தார். தந்தையும், மகனுமாக பாண்டவர்களின் சேனையை பெருமளவிற்கு அழித்தனர்.
அப்பொழுது அஸ்வத்தாமன் போரில் மடிந்து விட்டதாக கிருஷ்ணர் ஒரு புரளியைக் கிளப்பினார். அது உண்மைதானா என்று அறிய தருமனான யுதிர்ஷ்டிரரை துரோனாச்சாரியார் வினவினார்.
அவரது கேள்விக்கு பதிலளித்த யுதிர்ஷ்டிரர், "இற்ந்தது அஸ்வத்தாமன், ஆனால் அது மனிதனா அல்லது யானையா என்று எனக்கு தெரியாது " என்று கூறினார். தருமன் இவ்வாறு கூறியது கேட்ட துரோனாச்சாரியார் துயரத்தால் மயக்கமுற்றார். அஸ்வத்தாமன் அமரத்துவம் பெற்று இருப்பதை மறந்தார்.
மயக்கமுற்ற துரோனாச்சாரியாரை பாண்டவர் படைத் தளபதி திருஷ்டத்துய்மைன் வெட்டிச் சாய்த்தான். அஸ்வத்தாமன் சாகவில்லை... அஸ்வத்தாமன் என்ற பெயர் கொண்ட யானைதான் போரில் மடிந்தது. ஆனால் எல்லோரும் துரோனாச்சரியாரின் மகன் மாண்டதாகவே கருதிக் கொண்டனர்.
தனது தந்தை கொல்லப்பட்டது அஸ்வத்தாமனை பெரிதும் காயப்படுத்தியது. பாண்டவர்களின் ஆறு புதல்வர்களை அஸ்வத்தாமன் கொன்றான். மஹாபாரத போருக்கு பிறகு, அந்த யுகத்தை சேர்ந்த ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக மரணமுற்றனர். ஆனால் அஸ்வத்தாமன் இன்னமும் வாழ்கிறான். அவனது நெற்றியில் மணி ஒன்று இருந்தது அதனை பிடுங்கி எறிந்தான். ஆனால் மரணமடையவில்லை.
ஆசீர்கார் கோட்டைக்கு அருகில் நர்மதை நதிக்கரையில் உள்ள ஜபல்பூர் குடிமக்கள் அஸ்வத்தாமன் அங்கு உலவி வருவாதாக கூறுகின்றனர். தனது நெற்றியில் இருந்து கொட்டிக் கொண்டிருக்கும் உதிரத்தை நிறுத்த எண்ணெய்யையும், மஞ்சளையும் அஸ்வத்தாமன் கேட்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.