Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

Advertiesment
கட்டடம்
, செவ்வாய், 18 மார்ச் 2014 (16:05 IST)
ஒவ்வொரு இடத்திற்கும் அந்த இடத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் வேலியாவது அமைக்கவேண்டும்.
FILE

மதிற்சுவர் என்பது ஒரு இடத்தினை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், வாஸ்து படி ஒரு இடத்திற்கும் மற்றொரு இடத்திற்கும் பிரிவை உண்டாக்கி அந்த இடத்தை அதன் தனித்தன்மையுடன் செயல்பட வைக்கிறது.

மதிற்சுவர் அமைக்கும் போது கவனிக்க வேண்டிய சில வாஸ்து விதிமுறைகள்.

ஒரு கட்டடம் கட்டும் முன் அதன் மதிற்சுவரின் நான்கு மூலைகளையும் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்கும்படி சரியாக அமைத்திடவேண்டும்.

கட்டப்படும் கட்டிடம் அடையாள குறியிட்ட மதிற்சுவரின் மூலையிலிருந்து 90 டிகிரி மூலைமட்டம் வரும்படி கட்டடம் கட்ட வேண்டும்.

ஒரு இடத்திற்கு நான்கு திசையிலும் கட்டாயம் மதிற்சுவர் அமைக்க வேண்டும்.
webdunia
FILE

தாய்சுவருக்கும், மதிற்சுவருக்கும் இடையே உள்ள காலியிடம் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிகமாக இருக்க வேண்டும்.

மேலும் மதிற்சுவருக்கும், கட்டடத்தின் தாய்சுவருக்கும் இடையே அமைக்கப்படும் இடைவெளி சமமாக இருக்க வேண்டும்.

மதிற்சுவரின் எந்த மூலையும் நீண்டோ அல்லது உடைந்தோ இருக்ககூடாது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil