Religion Astrology Vasthu 0808 27 1080827028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாஸ்துபடி கிணற்றை மூடலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
வாஸ்துபடி கிணற்றை மூடலாமா?
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (12:45 IST)
இயற்கை நமக்கு நிறைய வரங்களைக் கொடுத்துள்ளது. நீர், வானம், காற்று, தீ, பூமி ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களாகும்.

இதில் ஒன்றுதான் கிணறு. நாம் வீடு கட்டும்போதோ அல்லது விவசாயத்திற்கோ கிணறு தோண்டுகிறோம். அது நமக்குத் தேவையான நீரை அளித்துள்ளது. அதுவும் பஞ்ச பூதங்களில் ஒன்றுதான்.

அதனை வாஸ்து பார்த்து ஏனோ தானோ வென்று மூடி விட முடியாது. மச்சம், கூர்மம் ஆகிய சக்கரங்களை கிணற்றில் போட்டுவிட்டு, கங்காதேவிக்கு நன்றி தெரிவித்துவிட்டு பின்னர் மூடினால் கொஞ்சம் நல்லது.

அதாவது அணைகளைக் கூடப் பார்த்தால் அணை நிரம்பும் போதும், விவசாயத்திற்காக திறந்து விடும்போதும், பூக்கள் தூவி அணையைத் திறந்து விடுவார்கள்.

அதாவது அணை நிரம்பியதில் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் விதத்தில் அவ்வாறு செய்கிறார்கள். அதுபோல கிணற்றை மூடும் போதும் அதற்கு நன்றி தெரிவித்துவிட்டு அதனைச் செய்தால் நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil