நிறைவேறாத ஆசைகளின் ஒரு பகுதியே கனவுகளாக வெளிப்படுகிறது. பாம்புகளை அடிக்கடி கனவில் பார்ப்பது ஒரு வகையில் நல்லது. கற்பனை சக்தி அதிகம் உள்ளவர்களின் கனவில் அடிக்கடி பாம்புகள் வருவது உண்டு.
பென்ஸீன் மூலக்கூறு கண்டறிய அலெக்சாண்டர் ஃப்ளெமிங் நீண்ட நாட்களாக முயன்றும் அதனைக் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய பாம்பு, புதிய வடிவத்தை உணர்த்திவிட்டுச் சென்றது. அதற்குப் பின்னரே அவர் பென்சிலினுக்கான மூலக்கூறு (பென்ஸீன் கூட்டமைப்பு) வடிவத்தை கண்டுபிடித்தார்.
பொதுவாக ஒருவரது கனவில் வரும் பாம்பு அவரைத் துரத்துவது போல் கண்டால் அந்த நபருக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். ஏதாவது ஒரு பிரச்சனை வரும் என்று கூறப்பட்டுள்ளது.
அதே பாம்பு அவரை கனவில் கொத்தி விட்டாலோ அல்லது அவரைத் துரத்தாமல் சாதுவாகச் சென்று விட்டாலோ பிரச்சனை இல்லை. ஆனால் கனவில் பாம்பு துரத்தினால் பிரச்சனைகளுக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும்.
இதேபோல் கனவில் கரும்பூனையை (முற்றிலும் கருப்பாக இருக்கும் பூனை) பார்ப்பதும் நல்ல சகுனமாக கருதப்படுகிறது. கனவில் மட்டுமின்றி சாதாரணமாகவே அதுபோன்ற பூனையைப் பார்ப்பது நல்லது.