Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பில்லி, சூன்யத்தில் இருந்து எப்படி காத்துக் கொள்வது?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
பில்லி, சூன்யத்தில் இருந்து எப்படி காத்துக் கொள்வது?
, வெள்ளி, 16 மே 2008 (16:36 IST)
இவைகளுக்கெல்லாம் பதிலடி கொடுத்துதான் தீர்க்க வேண்டும்.

என்னதான் பில்லி, சூன்யம் வைத்தாலும் நமக்கு நல்ல தசா புக்தி நடந்தால் அது நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் ஏழரை சனி, அஷ்டமத்து சனி போன்று கெட்ட தசை நடக்கும்போதுதான் எதிர்மறை செயலுக்கு ஆட்படுவோம்.

இதற்கு பதில்: நமக்கு செய்தவர்களுக்கு, நாமும் ஒரு மாந்ரீகரை வைத்து அவர்களுக்கு செய்து விடுவதுதான் பதிலடி. வேறு வழியில்லை.

இல்லை என்றால், எல்லைத் தெய்வங்களுக்கு சிலதெல்லாம் வைத்து பூஜை செய்வதும் நல்ல பலனைக் கொடுக்கும்.

அய்யனார், முனியப்பன் போன்ற தெய்வங்களுக்கு கொடுப்பது நல்லது.

வீட்டிற்குள்ளேயே இதுபோன்று செய்பவர்களுக்கு என்ன செய்வது?

மருந்து வைத்தல் போன்றவை நடைபெறுகின்றன. சில விதைகள், வேர்களுக்கு மதியை மழுங்கச் செய்யும் ஆற்றல் உள்ளன. அவற்றை உலவில் கலந்து கொடுத்துவிடுவதும் உண்டு.

இடது கையை நீட்டச் சொல்லி முருங்கை சாறை விட்டு பிடித்துக் கொள்ளச் சொல்வார்கள். அந்த சாறு சிறிது நேரத்தில் கெட்டியாகிவிட்டால் உடலில் மருந்து இருக்கும் என்று நம்பப்படுகிறது. சாறாகவே இருந்தால் மருந்து இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த மருந்து உடலின் பல்வேறு பகுதிகளிலும் சென்று தேங்கிவிடுகிறது. இதனை ஸ்கேனிங்கில் கூட பார்க்க முடியாது.

அதர்வன வேதங்களின் வாயிலான இவற்றை நீக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil