Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாக தோஷம் என்றால்...

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

நாக தோஷம் என்றால்...
, புதன், 9 ஏப்ரல் 2008 (15:10 IST)
நாக தோஷம் என்பது கிராமப்புறங்களில் பிரசித்திபெற்றது. கழுத்தில் மாலைப் போட்டுக் கொண்டு, அதாவது கொடி சுத்தி குழந்தைப் பிறப்பது போன்றவையும் எல்லாம் நாக தோஷத்தினால் ஏற்படுவது என்பது நம்பிக்கை.

ராகு - கேதுவின் ஒளிக்கற்றை, அதாவது கிரகணங்களால் பாதிக்கப்படுபதனால் ஏற்படும் விளைவுகளை நாக தோஷம் என்கிறோம். ஒரு சில குழந்தைகள் பிறக்கும்போதே மஞ்சள்காமாலை நோயுடன் பிறக்கின்றன. இதுவும் கிரகண பாதிப்புதான் காரணம்.

லக்னத்தில் ராகு இருந்து சந்திரனுடன் கேது சேர்ந்தால் குழந்தை நீலமாகப் பிறக்கும்.

ராகு - கேது சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் அதனை சர்ப தோஷம் என்று கூறுவார்கள். லக்னம், லக்னத்தில் இருந்து முதல் இரண்டு இடங்களில் பாவ கிரகங்கள் இருந்தாலோ, லக்னாதிபதியை பாவ கிரகங்கள் பார்த்தாலோ பாலாதிர்ஷ்ட தோஷம் என்று கூறுவர். பாலாதிர்ஷ்ட தோஷம் இருக்கும் குழந்தைகளுக்கு முதுகில் எல்லாம் மச்சம் இருக்கும்.

நாக தோஷம் வலுவாக இருக்கும் பிள்ளைகளுக்கு பாம்பு போலவே மச்சம் இருக்கும். தொடை, தலை போன்று ஒவ்வொரு இடத்தில் இருக்கும் மச்சத்திற்கும் ஒவ்வொரு பலன். அதற்கேற்ற பலன்களை அது கொடுக்கும்.

நாகப் பிரதிஷ்டம் என்பது ஆண் பாம்பும் பெண் பாம்பும், நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணைவது போன்று கல்லில் வடித்து அரசும், வேம்பும் சேர்ந்திருக்கும் இடத்தில் பிரதிஷ்டை செய்தால் விசேஷம் என்று மனுநீதி என்ற நூலில் கூறப்பட்டிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil