Religion Astrology Traditionalknowledge 0804 07 1080407027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜென்ம குரு என்றால் என்ன?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Advertiesment
ஜென்ம குரு
, திங்கள், 7 ஏப்ரல் 2008 (12:41 IST)
ராசிக்குள்ளேயே குரு வந்து உட்காருவதுதான் ஜென்ம குரு என்பதாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

இந்த ஜென்ம குரு நடக்கும் காலத்தில் புத்தி தடுமாற்றம், பாதை மாறிப் போதல் போன்றவை ஏற்படும்.

மாறுபட்ட சிந்தனை, தீய எண்ணம் ஏற்படும். எனவே ஜென்ம குரு நடக்கும் காலக்கட்டத்தில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ராமன் - சீதையும் கூட அந்த நேரத்தில்தான் பிரிந்திருந்தனர். எனவே அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ஜென்ம குரு நடக்கும்போது புத்தி வேலை செய்யாது, மெளன விரதம் இருங்கள். உணர்ச்சிகள் வேலை செய்யும். தாழ்வு மனப்பான்மை வரும். பழையவற்றை நினைத்துப் பார்த்து சண்டைப் போடுவார்கள்.

தனுசு ராசிக்காரர்களுக்கு தற்போது ஜென்ம குரு நடக்கிறது. எனவே அவர்கள் தங்களது துணையுடன் சண்டை போடாமல் அனுசரித்துப் போக வேண்டும்.

5.12.2008 வரை தனுசு ராசிக்காரருக்கு ஜென்ம குரு நீடிக்கிறது. எனவே அதுவரை அமைதியாக, எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

Share this Story:

Follow Webdunia tamil