Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிர்ஷ்ட நிறம் என்பதை எவ்வாறு கணிக்கின்றீர்கள்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

Advertiesment
அதிர்ஷ்ட நிறம் என்பதை எவ்வாறு கணிக்கின்றீர்கள்
, வெள்ளி, 25 ஜனவரி 2008 (14:58 IST)
ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நிறம் உண்டு. வானவியல் முறையில் பார்க்கும்போது ஒவ்வொரு நிறத்திற்கும் அலை நீளம் என்று சொல்லப்படுகிறது. நிறங்களில் குறைவான அலை நீளம் கொண்ட நிறங்கள், அதிகமாக பிரதிபலிக்கும் என்பது விதி.

சனி கிரகம் நீல நிறம், குறைவான அலை நீளம் கொண்ட நிறம் நீலம். ஆனால் அதிக அளவில் பிரதிபலிக்கிறது. கடல், வானம் என எங்கும் நீலம்தான் காணப்படுகிறது. சனி ஆளுமை கிரகம். அதிக சக்தி வாய்ந்த ராஜ கிரகம் என்று சொல்லப்படுகிறது. அதன் நிறத்தை நிறைய பேர் பயன்படுத்துவார்கள், இயற்கையின் படைப்புகள் அதிக அளவில் நீல நிறத்தில் இருக்கும்.

கேதுவிற்கு பிரவுன் மற்றும் ஆரஞ்சு என்றும் சொல்லலாம். கிறிஸ்டின் நாட்டில் வாழ்பவர்கள் இந்த நிறங்களை அதிகமாகப் பயன்படுத்துவார்கள். அதன் அடிப்படையில் பார்க்கும்போது கேது கிறிஸ்துவத்திற்கும், ராகு முகமது மதத்திற்கும் ஏற்ற கிரகங்கள் என்று கணித்துள்ளேன்.

ராகுவின் நிறம் நீல நிறம் மற்றும் பச்சை. இந்த நிறங்களைத்தான் இஸ்லாமிய நாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.

ராகுவிற்கு நட்பு புதன், கேதுவிற்கு நட்பு செவ்வாய். செவ்வாய் கிரகத்திற்குரிய நிறம் சிவப்பு. கேது ஆதிக்கம் உடையவர்கள் சிவப்பு நிறத்தையும் பயன்படுத்துவார்கள். ராகு ஆதிக்கம் இருந்தால் அவர்கள் நீலம் மற்றும் பச்சை நிறங்களைப் பயன்படுத்துவார்கள்.

ஒருவருடைய ஜாதகத்தைப் பார்த்து அவர்களுக்கு எந்த கிரகம் வலிமையாக இருக்கிறது என்றும். அந்த கிரகம் எந்த வீட்டிற்குரியது என்பதையும் பார்த்து அந்த கிரகத்திற்குரிய நிறத்தை தேர்வு செய்ய வேண்டும். வலிமையாக இருக்கிறது என்று கெட்ட வீட்டிற்குரிய கிரகத்தின் நிறத்தை தேர்வு செய்து கொடுத்து விடக் கூடாது. அது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

Share this Story:

Follow Webdunia tamil