ஜோதிடம் எதற்காக? ஏன் ஜோதிடத்தை நாட வேண்டும்?
ஜோதிடர் க.ப. வித்யாதரன்
நமது வாழ்வில் ஒன்றைச் செய்வதற்கு முன்பு பெரியோர்களிடமோ அல்லது செய்ய வேண்டிய செயலை ஒட்டிய துறையில் அனுபவம் பெற்றவர்களிடமோ அல்லது செயல் அல்லது பணி சார்ந்த நிபுணர்களிடமோ ஆலோசனையைப் பெறுகிறோம்.
அதுபோலவே வழிகாட்டலுக்கான ஒரு சப்ஜெக்ட்தான் ஜோதிடம். எங்கு பள்ளம் உள்ளது, எங்கு மேடு உள்ளது என்று கூறுவதுதான் ஜோதிடம்.
மதி (சந்திரன்) பலத்தால் வழிகாட்டப்பட்டாலும், பல நேரங்களில் மனிதர்கள் விதிப்படியே சென்று சிக்கிக் கொள்கின்றனர். இதனை `விதி வழி மதி செல்லும்' என்று குறிப்பிடுகின்றனர்.
ஆயினும், இதனை நன்கு புரிந்து கொண்டு அதன் வழிகாட்டுதலை ஏற்று வாழ்பவர்கள் பயனடைகின்றார்கள். அது அன்று முதல் இன்று வரை நிரூபனமாகி வருகிறது.