Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கன்னி!

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கன்னி!
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:05 IST)
FILE
எப்போதும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீங்கள், பிரதிபலன் பாராத சேவையால் எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பவர்கள். உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள்.

பணம் வரத் தொடங்கும். வழக்கு சாதகமாகும். அரைக்குறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். தாய்வழி சொத்துக்களை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வங்கிக் கடன் கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும்.

என்றாலும் வருடப் பிறப்பின் போது செவ்வாய் உங்கள் ராசிக்குள் நிற்பதால் முன்கோபம், குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சொத்து வாங்கும் போது தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் உங்கள் பூர்வ புண்யஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் நிற்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். மறைமுக அவமானம் வந்து நீங்கும். கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 11-ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பை பெற்றுத் தருவார். கல்வியாளர்களின் நட்பால் தெளிவடைவீர்கள். புது சொத்து வாங்குவீர்கள். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் எலியும், பூனையுமாக இருந்த நிலை மாறி நகமும் சதையுமாக இணைவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். பெரிய பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தாயாரின் உடல் நிலை சீராகும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ம் வீட்டில் கேதுவும் நிற்பதால் எதிலும் பிடிப்பற்றப் போக்கு, பிறர்மீது நம்பிக்கையின்மை, வீண் விரையம் வந்துச் செல்லும். சாதாரணமாகப் பேச போய் சண்டையில் முடியும். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும்.

பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனசை வாட்டும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால் எதிலும் ஒருவித பயம், படபடப்பு, ஒற்றை தலை வலி, செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். கணவன்-மனைவிக்குள் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதுப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீண் சந்தேகத்தை விலக்கி கொள்ளுங்கள். ஈகோவை தவிர்க்கப்பாருங்கள்.

வருடத்தின் இறுதியில் 17.12.2014 வரை சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச் சனியாக இருப்பதால் பல் வலி, காது வலி வந்து நீங்கும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளை படிப்பின் பொருட்டு கசக்கிப் பிழிய வேண்டாம். அவர்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். சில உண்மைகளை சில இடங்களில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். அந்தரங்க விஷயங்களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

பணப்பற்றாக்குறை ஏற்படும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 3-ம் வீட்டில் அமர்வதால் சோர்ந்திருந்த நீங்கள் புத்துயிர் பெறுவீர்கள். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தைரியம் கூடும். உங்களை ஏளமாகப் பேசியவர்களெல்லாம் வலிய வந்து நட்பு பாராட்டுவார்கள்.

வியாபாரிகளே! இந்தாண்டு பற்று வரவு கணிசமாக உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். வேலையாட்கள் உங்களைப் புரிந்துக் கொண்டு வலிய வந்து உதவுவார்கள். கடையை முக்கிய சாலைக்கு மாற்றுவீர்கள். பங்குதாரர்கள் கொஞ்சம் ஏடாகோடமாக பேசுவார்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். புரோக்கரேஜ், பதிப்பகம், சிமெண்ட், மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 12-ந் தேதி வரை வேலைச்சுமை வாட்டும். 13-ந் தேதி முதல் எதிர்ப்புகள் விலகும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை மதிப்பார். சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கன்னிப்பெண்களே! நிஜம் எது, நிழல் என்பதை தெளிவாக உணர்வீர்கள். காதல் குழப்பங்கள் நீங்கும். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள். கல்யாணம் கூடி வரும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

மாணவர்களே! நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பதக்கம் வெல்வீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள்.

கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

இந்த 2014-ம் ஆண்டின் முற்பகுதி அலைச்சலையும், ஆரோக்ய குறைவையும் தந்தாலும் பிற்பகுதி அதிரடி முன்னேற்றங்களை அள்ளித் தரும்.

பரிகாரம்:

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அருகிலுள்ள திருப்புன்கூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவலோக நாதரையும், ஸ்ரீசௌந்தர்ய நாயகி அம்மனையும் வெள்ளிக் கிழமையில் சென்று தரிசியுங்கள். சாலை துப்பரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சிக் கூடும்.


Share this Story:

Follow Webdunia tamil