Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 11 January 2025
webdunia

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மகரம்!

Advertiesment
2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : மகரம்!
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (15:53 IST)
FILE
வித்தியாசம் பார்க்காமல் பழகும் நீங்கள், வீட்டு நலனுடன், நாட்டு வளர்ச்சி குறித்தும் அதிகம் யோசிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் பிறப்பதால் சின்ன சின்ன கனவுகளெல்லாம் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். குலதெய்வக் கோவிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிக்குள்ளேயே உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்ரன் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் முடியும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். அழகு, இளமைக் கூடும். பழைய வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். பூர்வீக சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். பணப்பற்றாக்குறையை போக்க கூடுதலாக உழைப்பீர்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களைப் பார்க்க இருப்பதால் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.

தள்ளிப் போன திருமணம் கூடி வரும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். மருத்துவ சிகிச்சைக்குப் பின்னும் குழந்தை பாக்யம் கிடைக்கவில்லையே என வருந்தினீர்களே! இந்த வருடத்தில் வாரிசு உருவாகும். விலை உயர்ந்த தங்க ஆபரணம் வாங்குவீர்கள்.

ஆரோக்யம் சீராகும். ஏதோ ஒன்றை இழந்ததைப் போல இருந்தீர்களே! அந்த நிலை மாறி உற்சாகம் அடைவீர்கள். கட்டிட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். சொந்த-பந்தங்களின் சுயரூபத்தை தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப இனி செயல்படுவீர்கள்.

20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் கேது பகவானும், ராசிக்கு 10-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் வாகன விபத்துகள், காரியத் தாமதம், வீண் அலைச்சல், டென்ஷன் வந்துப் போகும். தாயாருக்கு கை, கால் வலி, சோர்வு வந்து நீங்கும். அவ்வப்போது மற்றவர்களைப் போல நம்மால் சுதந்திரமாக இருக்க முடியவில்லையே என வருந்துவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 3-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உங்களுக்குள் ஒரு சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரி அடிக்கடி வாய்தா வாங்கியதால் தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் இனி சாதகமான தீர்ப்பு வரும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். ஆனால் ராகு 9-ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையின் ஆரோக்யம் பாதிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வேற்றுமொழிப் பேசுவர்கள், வேற்று மதத்தை சார்ந்தவர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 10-ம் வீட்டிலேயே நீடிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். என்றாலும் உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்கள், வீண் பழிகள் வந்துச் செல்லும். நெருக்கமானவர்களிடம் கூட குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 11-ம் வீடான லாப வீட்டில் நுழைவதால் திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வெளிநாடு சென்று வருவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். அரசால் ஆதாயமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தற்காலப் பணியில் இருப்பவர்கள் நிரந்தரமாக்கப்படுவீர்கள். மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார்.

வியாபாரிகளே! ஜுன் மாதம் முதல் வியாபாரம் சூடுபிடிக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். பழைய பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். புது பங்குதாரரால் பயனடைவீர்கள். கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு, பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்தி, அழகுப்படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்களே! உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். பாரபட்சமாக நடந்துக் கொண்ட அதிகாரி உங்களைப் பாராட்டும்படி நிலைமை சீராகும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். இடமாற்றம் சாதகமாக அமையும். ஆனாலும் 10-ல் சனி தொடர்வதால் மறைமுக பிரச்னைகள் இருக்கும். சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். ஜுன் மாதம் முதல் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.

கன்னிப்பெண்களே! போட்டித் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவீர்கள். வேலைக் கிடைக்கும். கல்யாணம் கூடி வரும். காதல் குழப்பங்கள் நீங்கும். கூடுதல் மொழி கற்றுக் கொள்ள முயற்சி செய்வீர்கள்.

மாணவர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் உங்கள் முயற்சிக்கு பக்கபலமாக இருப்பார். பெற்றோர் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். நல்ல நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! யதார்த்தமான படைப்புகளால் முன்னேறுவீர்கள். அயல்நாட்டு நிறுவனத்திலிருந்தும் நல்ல வாய்ப்புகள் வரும்.
இந்தப் புத்தாண்டு உங்களின் திறமைகளை அதிகப்படுத்துவதுடன், பணப்புழக்கத்தையும் வெற்றியையும் அள்ளித் தரும்.

பரிகாரம்:

திருவண்ணாமலை-கடுவனூருக்கு அருகிலுள்ள சங்கராபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதாண்டேஸ்வரரையும், ஸ்ரீசிவகாமி அம்மையாரையும் வெள்ளிக் கிழமையில் சென்று வணங்குங்கள். மகப்பேறு இல்லாதவர்களுக்கு உதவுங்கள். மதிப்புக் கூடும்.

Share this Story:

Follow Webdunia tamil