Religion Astrology Specialpredictions 1312 31 1131231038_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : கும்பம்!

Advertiesment
2014 புத்தாண்டு இராசி பலன் கும்பம்
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (15:50 IST)
FILE
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது உங்களைப் பொறுத்த வரை உண்மை தான் நீங்கள் கோபப்பட்டால் அதில் ஒரு நியாயம் இருக்கும். இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப வீட்டிலேயே நிற்பதால் போராட்டங்களை சளைக்காமல் சமாளிக்கும் பக்குவம் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு.

பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்தால் வருமானம் வரும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு கட்டுவதற்கு அனுமதி கிடைக்கும். உங்களுக்கு லாப ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவாலான காரியங்களையும் சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். பிரபலங்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வாங்குவீர்கள்.

வருடம் பிறக்கும் போது ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் சின்ன சின்ன விபத்துகள் வரும். முன்கோபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். சகோதரங்கள் அதிருப்தி அடைவார்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். சொத்துப் பிரச்னை வெடிக்கும். வழக்குகளில் எச்சாக்கையாக இருங்கள். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுவது நல்லது. வாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் நிற்பதால் நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள், பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாக தீரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.


மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி, உத்தியோகம் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ம் வீட்டிலேயே மறைவதால் சின்ன சின்ன காரியங்களைக் கூட இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து விலகும். வி.ஐ.பிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சட்ட விதிகளை மீறி யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். 20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் கேது நிற்பதால் எதையும் திட்டமிட்டு செய்வீர்கள்-ஷேர் மூலம் பணம் வரும். வேற்றுமதத்தை சேர்ந்தவர்களால் உதவிகள் உண்டு. ராசிக்கு 9-ம் வீட்டில் ராகு நிற்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

தந்தையாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் அவருடன் மனத்தாங்கல் வந்துச் செல்லும். தந்தைவழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வரும்.21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டிலும், ராகு 8-ம் வீட்டிலும் அமர்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. கண்ணை பரிசோதித்துக் கொள்ளுங்கள். பல் வலி, காது வலி வந்து விலகும். பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக பிரச்னைகள் வரக்கூடும். காலில் அடிப்படும்.

இந்தாண்டு முழுக்க உங்கள் ராசிநாதன் சனிபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். பயணங்கள் அதிகரிக்கும்.

ஆனால் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் சனி 10-ல் அமர்வதால் வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதைப் புரிந்துக் கொள்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். புது பதவிகளும், சிறப்பு பொறுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

வியாபாரிகளே! லாபம் சுமாராக இருக்கும். சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்ப சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முதலீடுகளையும் மாற்றுவீர்கள். வேலையாட்களால் சின்ன சின்ன நட்டங்களும், ஏமாற்றங்களும் வரும். துரித உணவகம், நிலக்கரி, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்கள் அவ்வப்போது புலம்பினாலும் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை பணிகளை தோய்வின்றி முடிப்பீர்கள். 13-ந் தேதி முதல் உங்களையும் அறியாமல் ஒருவித பயம் இருந்துக் கொண்டேயிருக்கும். சக ஊழியர்களைப் பற்றி குறைக் கூற வேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய ரகசியங்களையும் வெளியிட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.

கன்னிப்பெண்களே! உங்களின் ஆசைகள் நிறைவேறும். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் நீங்கள் எதையோ சொல்லப் போய் அதை சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. கல்யாண பேச்சு வார்த்தைகள் கொஞ்சம் தாமதமாக முடியும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். அவ்வப்போது தூக்கம், மந்தம், மறதி வந்து நீங்கும். எதிர்பார்த்த நிறுவனத்தில் உயர்கல்வி பெற போராடியும், அதிக செலவு செய்தும் சேர வேண்டி வரும்.

கலைத்துறையினர்களே! உங்களின் தனித்திறமையை வெளிப்படுத்துவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியாவதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள்.

இந்தப் புத்தாண்டு சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் உள்ள முறப்பநாடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாச நாதர், சிவகாமி அம்மையையும், ஸ்ரீவீர பைரவரையும் அஷ்டமி திதி நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.

Share this Story:

Follow Webdunia tamil