Religion Astrology Specialpredictions 1212 01 1121201047_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: மேஷம்

Advertiesment
ராகு கேது பெயர்ச்சி ராசி பலன் மேஷம்
FILE
வெள்ளை மனசுக்காரர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடு படுத்தியெடுத்திக் கொண்டிருந்த ராகு பகவான் இப்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் வந்து அமருவதால் திக்கு திசையறிந்து வெளியுலகத்திற்கு வருவீர்கள். உங்களின் அறிவுத்திறனை மழுங்க வைத்த ராகுபகவான் இப்பொழுது உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக் கொண்டு வரப்போகிறார். தொட்டதுக்கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துககாட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள்.

குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் களஸ்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சின்ன சின்ன விவாதங்கள் வெடிக்கத்தான் செய்யும். அதை பெரிதுபடுத்த வேண்டாம். மனைவிக்கு இரத்த அழுத்தம், கர்ப்பப்பை கோளாறு வந்துப் போகும். மனைவி உங்களிடமிருக்கும் கெட்ட பழக்க வழக்கங்களை சுட்டிக் காட்டுவார். அவற்றையெல்லாம் திருத்திக்கொள்ள பாருங்கள். மனைவிவழி உறவினர்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள், கருத்துமோதல்கள் வந்து போகும். காசு பணம் எவ்வளவு இருந்தும் என்ன பிரயோஜனம் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என நெடுங்காலமாக வருந்தினீர்களே, இனி கவலை வேண்டாம். அழகும், அறிவும் மிகுந்த குழந்தை பிறக்கும். அரசு வேலைகள் தடைபட்டிருந்ததே! இனிக் விரைந்து முடியும். குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக் கடனை சிறப்பாக முடிப்பீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் யோகாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம் என வீடு களைக்கட்டும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதியில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் இருசக்கரவாகனத்தை இயக்கும் போது கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பம் அதிகரிக்கும். கனவுத் தொல்லை வந்துப் போகும். தாழ்வுமனப்பான்மை மற்றும் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப்பாருங்கள். வேற்றுமொழிக்காரர்கள், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. எண்ணெய் மற்றும் வாயுப் பதார்த்தங்களை தவிர்த்துவிடுங்கள். வாகனம் வாங்குவீர்கள்.

உங்கள் ராசிநாதனான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். சகோதர வகையில் சின்ன சின்ன இழப்புகளும், கருத்து மோதல்களும் வந்துப் போகும். வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரத்தை சரி பார்க்கவும். சொத்து சேரும். வழக்கில் வெற்றி உண்டு. கௌரவப் பதவிகள் கிடைக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும்.

பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு சேமிப்பீர்கள். உயர்கல்வியில் வெற்றி பெற்று உங்களை பெருமைபடுத்துவார்கள். பழைய நண்பர்கள், உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். நிரந்த வேலையின்றி தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவிற்கு நேரம் ஒத்துழைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், காரெண்டர் என்று கையெழுத்திட்டு மாட்டிக் கொள்ளாதீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க்கோளாறு, மன இறுக்கம் விலகும். மாணவர்களே! விளையாடும் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருங்கள். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். சகாக்களுடன் அவ்வப்போது மனக்கசப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். 7-ம் வீட்டில் ராகு வந்தமர்தால் கூட்டுத் தொழிலில் குழப்பங்களும், பிரிவுகளும் வரும். பங்குதாரர்களிடம் காரசாரமான விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

புதிய முதலீடுகளில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட், கட்டிட வகைகளால் லாபம் பெறுவீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பழைய பாக்கிகள் கைக்கு வரும். உத்யோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடந்துக் கொள்ளுங்கள். உங்களின் கடின உழைப்புக்கேற்றாற்போல பதவி உயர்வும் அடைவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். கணிணி துறையில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். எனினும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத்துறையினருக்கு போட்டிகள் அதிகரிக்கும். என்றாலும் போராடி வெற்றி பெறுவார்கள். உங்களின் படைப்புகளுக்கு கைத்தட்டலுடன், காசும் சேரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் நின்று கொண்டு உங்களை பக்குவமில்லாமல் பேச வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்தமருவதால் இனி சமயோஜித புத்தியுடன் பேச வைப்பார். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாக சிந்தித்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும். இனி அவர்களின் உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். ராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், சோர்வு, காய்ச்சல், தூக்கமின்மை, எதிலும் ஒரு சலிப்பு, டென்ஷன் வந்து நீங்கும். வாங்கிய கடனை எப்படி அடைக்கப் போகிறோமோ என்ற பயம் வரும். உடன்பிறந்தவர்களால் வீண் விவாதமும், மன உளைச்சலும் வந்து போகும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். பழைய நண்பர்களால் உதவியுண்டு. இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை வந்து நீங்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். படிப்பு, உத்யோகத்தின் பொருட்டு உங்களை விட்டு பிரிவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு வந்துப் போகும். ஆரோக்யம் பாதிக்கும்.

உங்கள் தன-சப்தமாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு உண்டு ஆனால் திடீர் செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்படும். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. சாலைகளை கடக்கும் போது கவனம் தேவை. வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவீர்கள்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் யூரினரி இன்பெக்ஷன், தோலில் நமைச்சல், அலர்ஜியால் கட்டி வந்துப் போகும். சிலருக்கு சின்ன சின்ன அறுவை சிகிச்சைகள் வரக்கூடும். புதியவர்களை வீட்டிற்கு அழைத்து வர வேண்டாம். முக்கிய காரியங்கள் இரண்டு அல்லது மூன்றாவது முயற்சியில் தான் முடிவடையும். குறிப்பாக அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இக்காலக்கட்டத்தில் எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும். தியானம், யோகா இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு இருந்தாலும் அவ்வப்போது அவர்களால் சச்சரவுகளும் இருக்கும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிம்மதியுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது வீண் விவாதங்கள் வரத்தான் செய்யும். கொஞ்சம் பொறுத்து போங்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். வரிகளை முறையாக செலுத்திவிடுவது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எனினும் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் பணி புரிபவர்கள் உங்களை குறை கூறத்தான் செய்வார்கள் கவலை வேண்டாம்.

இந்த ராகு-கேது மாற்றம் வேலைச்சுமையால் களைப்பு, சோர்வையும், சின்ன சின்ன தோல்வியால் மனஇறுக்கத்தையும் தந்தாலும் தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும் இலக்கை அடைய வைக்கும்.

பரிகாரம்:
பாதாளத்திலிருந்து ஆதிசேஷன் தோன்றி வழிபட்ட மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள பாமணி எனும் தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீஅமிர்தநாயகியையும் தரிசியுங்கள். தாயை இழந்தவர்க்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil