Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: துலாம்

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: துலாம்
, சனி, 1 டிசம்பர் 2012 (20:11 IST)
FILE
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுபவர்களே! உங்களுக்கு இராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்த ராகு ஏடாகூடமாய் பேச வைத்து எல்லாவற்றிலும் சிக்க வைத்தார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்புகளையும் கரைய வைத்தார். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கத்தை குறைத்தார். இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் ஓரளவு பிரச்சனைகள் குறையும். இனி இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள்.

கௌரவச் செலவுகளையும் குறைப்பீர்கள். பணவரவும் அதிகரிக்கும். அவசர தேவைக்கு வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். ஆனால் ராசிக்குள் ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் இனி நீங்கள் அதிக அக்கறை காட்ட வேண்டியது வரும். உங்கள் ராசிக்குள்ளேயே ஏற்கனவே சனிபகவானும் அமர்ந்து கொண்டிருப்பதால் நீரிழிவு நோய், யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள்.

போலி மருத்துவரிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். முன்கோபம் அதிகரிக்கும். சின்ன சின்ன வேலைகள் கூட சிக்கலாகி முடியும். என்றாலும் உங்கள் ராசிநாதனான சுக்ரனுக்கு ராகு நட்பு கிரகமாக வருவதால் அனைத்துப் பிரச்சனைகளிலிருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். தண்ணீரை காய்ச்சி குடிக்கவும். வாகன விபத்துகள் நிகழக்கூடும். டென்ஷாக இருக்கும் நாட்களில் வாகனத்தை இயக்க வேண்டாம். பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தையும் கண்காணியுங்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதிய-சஷ்டமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தடைகள் நீங்கும். ஓரளவு பணமும் வரும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஏமாற்றங்கள், இழப்புகளை சந்திக்க வேண்டியது வரும். வழக்கை சுமுகமாக முடிக்க முயற்சிப்பீர்கள். சிலர் வீடு மாற வேண்டியது வரும். நண்பர், உறவினர்களின் வீட்டு விசேஷங்களை எடுத்து செய்வீர்கள். இளைய சகோதரர் வகையில் அலைச்சல் இருக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை குறைந்த வட்டிக்கு மாற்றுவீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் இக்காலகட்டத்தில் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவு, விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவது நல்லது. வாகனம் வாங்குவீர்கள். பணவரவும் உண்டு. திருமணம் கூடி வரும்.

உங்கள் தன-சப்தமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் வரும். சொத்துப் பிரச்சனையை தீர்க்க புது வழி கிடைக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவுவார்கள். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வீடு கட்டும் முயற்சி பலிதாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மனைவிக்கு ரத்த சம்பந்தப்பட்ட நோய் வந்து போகும்.

ராசியில் நிற்கும் ராகு சலிப்பை உண்டாக்குவார். உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வீண்பகை, மனக்கசப்புகள் வரும். குழந்தை பாக்யம் உண்டாகும். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். சாட்சிக் கையெழுத்துப் போட்டு பலமுறை சிக்கிக்கொண்ட அனுபவம் உங்களுக்கு உண்டு. இனிமேல் ரொம்ப தெரிந்தவாராக இருந்தாலும், அவருக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

சாலைகளில் வாகனத்தை இயக்கும்போது விதிமுறைகளை மீற வேண்டாம். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். கன்னிப்பெண்கள் பெற்றோருடன் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளுவது நல்லது. தடைபட்ட கல்யாணம் முடியும். மாணவ-மாணவியர்களுக்கு நினைவாற்றல் கூடும். வகுப்பறையில் முன்வரிசையில் வந்து அமருங்கள். விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களை தவிர்க்கப் பாருங்கள். அரசியல்வாதிகள் தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம். வீண் விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

வியாபாரத்தில் அதிக முதலீடுகளை தவிர்த்து இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பார்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள். புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடி பெறுவீர்கள். அரசு விஷயங்களில் அலட்சியப்போக்கு வேண்டாம். உத்யோகத்தில் தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். கணினி துறையினர்களுக்கு சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களே! உங்கள் படைப்பாற்றலுக்கேற்ற நல்ல வாய்ப்புகள் வரும். சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்து போங்கள். பரிசு, பாரட்டுகள் குவியும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது இப்பொழுது ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண் பயம் விலகும். பிரச்சனைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். பயனற்ற பயணங்கள் இனி இருக்காது. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். தீர்வு தேடி வெளியில் அலையாமல் உங்களுக்குள்ளேயே உங்கள் உள்மனசுக்குள்ளேயே விடையிருப்பதை இனி உணருவீர்கள். மனைவியிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். விட்டுக்கொடுத்து போங்கள். ஒருவருக்கொருவர் சந்தேகப்படுவதை தவிர்த்து அனுசரித்து போவது நல்லது. வீட்டுக்குள் ஈகோவை வளர்த்துக் கொள்ளாதீர்கள். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். சொத்துப் பிரச்சனை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். அரசு காரியங்களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். ஆனால் முன்கோபத்தால் புது பிரச்சனைகள் உருவாகும். மூத்த சகோதரர் அனுசரணையாஇருப்பார். புது முதலீடுகள் வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளும் எடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிநாதனும் அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் புதிய பாதையில் பயணித்து வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பணத்தட்டுபாடு குறையும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். என்றாலும் ஓய்வெடுக்க முடியாதபடி அலைச்சலும், அசதி, சோர்வும் வந்து நீங்கும்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் சின்ன சின்ன விபத்துகள் வந்து நீங்கும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். மனைவி வழியில் செலவுகள் அதிகரிக்கும். உறக்கமில்லாமல் போகும். நீண்டநாள் பிராத்தனைகளை இப்பொழுது நிறைவேற்றுவீர்கள்.

உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் உங்களை வந்து சந்திப்பார்கள். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த வாகனத்தை மாற்றிவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களிடையே நிலவி வந்த மனஸ்தாபங்கள் விலகும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

7-ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் கூட்டுத்தொழிலை தவிர்க்கப்பாருங்கள். பங்குதாரர்களுடன் பகை வரும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மேலதிகாரியுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத்திறன் கூடும். உடன் பணிபுரிபவர்களால் நிம்மதியுண்டாகும்.

இந்த இராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்கள் உடலையும், உள்ளத்தையும் உரசிப்பார்த்தாலும், கேதுவால் எதிர்நீச்சலில் வெற்றி பெறும் சக்தி உண்டாகும்.

பரிகாரம்:
நாகப்பட்டினத்தில் ஸ்ரீஆதிசேஷனின் பூஜையில் மகிழ்ந்து அருள்பாலித்த ஸ்ரீகாயாரோகணேஸ்வரரையும், ஸ்ரீ நீலாயதாட்சி அம்மனையும் வழிபடுங்கள். இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நிம்மதியுண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil