Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ச‌னி‌‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மேஷம்

ச‌னி‌‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : மேஷம்
, திங்கள், 12 டிசம்பர் 2011 (19:32 IST)
நெஞ்சுக்கு நேராக பேசும் நீங்கள், யார் தயவிலும் வாழ மாட்டீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து அடிப்படை வசதி, வாய்ப்புகளை அதிகப்படுத்தி சமூக அந்தஸ்தையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 7-ம் வீட்டில் அமர்வதால் எதிலும் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

உங்கள் பாதகாதிபதியான சனிபகவான் வலுவடைந்து 7-ல் அமர்வதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகங்கள் வரும். உங்கள் இருவருக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். அநாவசியமாக யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வங்கிக் காசோலைகளில் முன்னரே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பு கவனமாக படித்துப் பார்ப்பது நல்லது. அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம். சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் செலுத்துவது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் செல்ல வேண்டாம். நெருங்கிப் பழகிய நண்பர்கள், உறவினர்களாக இருந்தாலும் இடைவெளிப் பின்பற்றுவது நல்லது.

முக்கிய காரியங்களை மற்றவர்களை நம்பி விடாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. உத்‌தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தை பிரிய வேண்டி வரும். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்‌‌கியம் பாதிக்கும். ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வேற்றுமொழிக்காரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பணவரவு, வி.ஐ.பிகளுடன் நட்பு, வாகன யோகம் உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் சற்றே உடல் நிலை பாதிக்கும். இரத்தத்தில் ஹிமோகுளோபின் குறையும். இரும்பு, நார்ச் சத்துள்ள காய், கனிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைச்சுற்றல், அடிவயிற்றில் வலி, முதுகு வலி, மூச்சுப் பிடிப்பு, பைல்ஸ் வந்து நீங்கும். சகோதரர் கடிந்துக் கொள்வர். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். லாகிரி, போதை வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வேலைக் கிடைக்கும். வழக்கு சாதகமாகும்.

உங்கள் பாக்ய-விரையாதிபதியான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் செல்வம், செல்வாக்குக் கூடும். தடைப்பட்ட வேலைகள் உடனே முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வீடு கட்டுவீர்கள். வங்கி கடன் கொடுத்து உதவும். மகளுக்கு கல்யாணம் சிறப்பாக முடியும். பிள்ளைகள் அயல்நாடு செல்வார்கள். புண்ணிய‌த் தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபமும், உத்யோகத்தில் உயர்வும் உண்டாகும்.

சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் விளம்பரத்தில் மயங்கி புது சோப்பு, பேஸ்டு, ஷாம்பு வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் முடி உதிர்வதற்கும், தோலில் நமைச்சல் வருவதற்கும் வாய்ப்புள்ளது. நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செறிமானக் கோளாறு வந்து நீங்கும். புளி, உப்பை உணவில் குறைத்துக் கொள்ளுங்கள். மறதி, பித்தத்தால் மயக்கம் வந்து நீங்கும். சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல் வரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சேமிப்புகள் கரையும். தந்தையாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். ஆடம்பரப் பேச்சை குறைப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிகம் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். கூட்டுத் தொழில் வேண்டாம். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை வெளிப்படையாக சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை இதமாகப் பேசி வசூலியுங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். கமிஷன், மருந்து வகைகளால் லாபம் வரும். சிலருக்கு பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாட்களை விட்டுப்பிடிப்பது நல்லது.

உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். அதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களையும் வெளியில் சொல்ல வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம்.

கன்னிப் பெண்களே! காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மாணவ-மாணவிகளே! மந்தம், மறதி வரும். அலட்சியப் போக்கால் மதிப்பெண் குறையும். விடைகளை எழுதிப்பாருங்கள். விளையாட்டின் போது சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வகுப்பாசிரியரின் வார்த்தையை‌‌த் தட்ட வேண்டாம். கலைஞர்களே! சிறுசிறு வாய்ப்புகளாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். சம்பள பாக்கி கைக்கு வரும்.

இந்த‌ச் சனி மாற்றம் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிய வைப்பதுடன் உங்களை புதிய பாதையில் சென்று வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்:

திருநள்ளாறில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். தொழு நோய் மற்றும் காசநோயாளிகளுக்கு உதவுங்கள். தடைகள் நீங்கி நல்லது நடக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil