கலகலப்பாகப் பேசுவதுடன் கறாராகவும் இருப்பவர்களே, நல்ல நிர்வாகத் திறனும், பரந்த அறிவும், பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறியும் அசாத்தியத் திறனும் உள்ளவர்களே! உங்கள் ராசிநாதனான அங்காரகனின் அவிட்ட நட்சத்திரத்திலும் உங்களுக்கு லாப ராசியிலும் இந்த புத்தாண்டு பிறப்பதால் குடும்பத்தில் அமைதி ஓங்கும். சலசலப்பு குறையும். ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரைகுறையாக இருந்த வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். ஜீன், ஜீலை மாதங்களில் நவீன மின்சாரம் மற்றும் மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.
நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் கைக்கு வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை சூரியன் வலுவாக இருப்பதால் திடீர் பணவரவு, வழக்கில் சாதகமான தீர்ப்பு மற்றும் மனதிற்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். தாயாருக்கு இருந்த மருத்துவச் செலவுகள் நீங்கும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு பகவான் உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் கௌரவம் கிட்டும்.
ஏப்ரல், மே மாதத்தில் செவ்வாயும், சூரியனும் வலுவிழந்திருப்பதால் முன்கோபம் வரும். சகோதர பகை, அலைச்சல் வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து விலகும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து விலகும். கண்எரிச்சல், இரத்த அழுத்தம் வந்து நீங்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாத மத்திய பகுதி வரை சூரியன் பாபகிரக சேர்க்கை பெறுவதால் கர்ப்பினிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். குடும்ப ரகசியங்களை அக்கம்-பக்கம் வீட்டாரிடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
26.9.2009 முதல் சனி உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிற்கு செல்வதால் பழைய கடன் பிரச்சனை தீரும். 27.10.2009 முதல் கேது வலுவடைவதால் புது முயற்சிகளில் வெற்றி உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு பெருகும். எலக்டரானிக்ஸ்,மூலிகை வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். சம்பளம் திருப்திகரமாக இருக்கும். இந்த புத்தாண்டு சிறுசிறு இடையூறுகளை தந்தாலும் இறுதியில் உங்களை வெற்றி பெற வைக்கும்.