Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2009 ஆங்கில வருட‌ப் பலன் : மிதுனம்

2009 ஆங்கில வருட‌ப் பலன் : மிதுனம்
, புதன், 31 டிசம்பர் 2008 (18:30 IST)
மனிதர்களின் மனநிலையை நொடிப்பொழுதில் புரிந்துகொள்ளும் அசாத்திய ஆற்றல் உள்ளவர்களே! துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே! உங்கள் யோகாதிபதியான சுக்ரன் 9-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் வளங்கள் சேரும். உடல் ஆரோக்யம் கூடும். மார்ச் மாதம் மத்தியிலிருந்து குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஓயும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வீண் சந்தேகம் விலகும். முடிக்க முடியாதென கைவிட்ட காரியங்களை கூட கச்சிதமாக முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வருட மத்தியில் குரு சாதகமாக இருப்பதால் பணப்பற்றாக்குறையினால் அறைகுறையாக இருந்த வீடு கட்டும் பணி வங்கிக் கடன் உதவியால் முமுமையடையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி கிட்டும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அயல்நாடு செல்வார். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த படி நல்ல குடும்பத்திலிருந்து வரன் அமையும். புது வண்டி வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்கள் வரும். ஈகோ பிரச்சனை வேண்டாமே. உடன்பிறந்தவர்களால் அலைச்சலும், செலவுகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். தாய்வழி உறவினர்கள் சிலர் நன்றி மறந்து உங்களிடம் சண்டையிடுவார்கள். ஜீலை 15 முதல் வேலைச்சுமை, சைனஸ் தொந்தரவு, கனவுத் தொல்லை, முதுகு வலி, நரம்புப் பிடிப்பு வந்து நீங்கும். கட்டி வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். வருடப் பிற்பகுதியில் வாகன விபத்து வரக்கூடும்.

தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தங்க ஆபரணங்கள் இரவல் தர வேண்டாம். வியாபாரத்தில் புதுக் கிளையை தொடங்குவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். என்றாலும் வருடப் பிற்பகுதியில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் இருக்கும் கருத்து மோதல்களை பேசித் தீர்க்கப் பாருங்கள். புதுப் பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். இடமாற்றம் உண்டு. இந்த புத்தாண்டு முற்பகுதியில் முன்னேற்றத்தையும் இறுதிப்பகுதியில் வேலைச்சுமையையும் தருவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil