Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2009 ஆங்கில வருட‌ப் பலன் : கன்னி

2009 ஆங்கில வருட‌ப் பலன் : கன்னி
, புதன், 31 டிசம்பர் 2008 (18:25 IST)
தீவிரமாக யோசித்து மிதமாகச் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வாதங்களில் வெல்வீர்கள். பிறர் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டி நல்வழிப் படுத்துவீர்கள். உங்கள் 6-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிர்ப்புகள் அடங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

நீண்ட நாளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தந்தை வழி உறவினர்கள் உங்களை காயப்படுத்தினார்களே இனி உங்களைப் புகழ்ந்து பேசுவார்கள். கடனாக பணம் கொடுத்து ஏமாந்தீர்களே அந்த பணம் கைக்கு வரும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் விலை உயர்ந்த நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த படி பணம் வரும். மகனுக்கு பெரிய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சுகமான நினைவுகளில் அவ்வப்போது மூழ்குவீர்கள். வருட மத்தியப் பகுதியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

ஜனவரி மாதத்தில் சுக்ரன் 6-ல் மறைவதால் மருத்துவச் செலவுகளும், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளும் வந்து நீங்கும். மே 22 முதல் ஜீலை 2 வரை 8-ல் செவ்வாய் இருப்பதால் முன்கோபம், சகோதர பகை, சொத்து வாங்குவதில் சிக்கல்கள், இழப்புகள் வந்து விலகும். தலைச் சுற்றல், பார்வை குறைவு, நரம்புக் கோளாறு ஏற்படலாம். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 6-ல் மறைவதால் மனக்குழப்பங்களும், அலைச்சல்களும், வீண் பழிகளும் வந்து நீங்கும்.

செப்டம்பர் மாதப் பிற்பகுதியில் ஜென்ம சனி தொடங்குவதால் உணவில் கட்டுப்பாடு தேவை. எண்ணெய் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. அண்டை அயலாருடன் அளவாகப் பழகுங்கள். வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் காண்பீர்கள். புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இந்த புத்தாண்டு சொஞ்சம் அலைச்சலை தந்தாலும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமையும்.

Share this Story:

Follow Webdunia tamil