எறும்புபோல் அயராது உழைத்து, தேனீபோல் சேமிக்கும் இயல்பு உடைய நீங்கள் எப்போதும் நல்லதே நினைப்பவர்கள். உங்களின் சுக பாக்யாதிபதியான சுக்ரன் உங்கள் ராசிக்குள் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த புத்தாண்டு பிறப்பதால் நீண்ட நாள் லட்சியங்கள் நிறைவேறும். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். ஜனவரி மாதத்தில் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை குடும்ப ஸ்தானத்தை சுக்ரன் உச்சமாவதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். விலையுர்ந்த உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். ஏப்ரல் மாத மத்தியிலிருந்து ஆகஸ்ட் மாதத்தின் மத்தியப்பகுதி வரை உள்ள காலகட்டத்தில் குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். தாயாரின் உடல் நிலை சீராகும்.
அக்டோபர் 7-ந் தேதியிலிருந்து செவ்வாய் 6-ம் வீட்டில் மறைவதால் வழக்குகள் சாதகமாகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். மகளின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். மகன் பொறுப்பாக நடந்து கொள்வார். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரிகளின் நட்பு கிட்டும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைக்கும் பொருட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.
பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 13 வரை உங்கள் ராசியை நெருப்பு கிரகங்கள் சூழ்வதால் சளித் தொந்தரவு, இரத்த அழுத்தம் அதிகரித்தல், காரியத் தடை, முன்கோபம் வந்து விலகும். தாய் வழி உறவினர்களிடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். இக்காலகட்டத்தில் அரசுக்கு அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிதானித்து செயல்படுங்கள். செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலகட்டங்களில் செலுத்துவது நல்லது.
மே, ஜீன், ஜீலை மாதங்களில் உங்கள் ராசிக்குள்ளேயே குரு நுழைவதால் கணவன்-மனைவிக்குள் சண்டை, சச்சரவுகள் வரும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். செப்படம்பர் பிற்பகுதியிலிருந்து அஷ்டமத்துச் சனி வருவதால் யாரையும் நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள், மனஉளைச்சல், இழப்புகள், வதந்திகள், விபத்துகள் வந்து நீங்கும். இருந்தாலும் அக்காலகட்டத்தில் செவ்வாய் சாதகமாக இருப்பதால் பாதிப்புகள் குறையும்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பாராத தன லாபம் வரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். இரும்பு, மருந்து வகைகள் ஆதாயம் தரும். கூட்டுத்தொழிலில் நிதானம் தேவை. உத்யோகத்தில் சக ஊழியர்களின் எதிர்ப்புகள் இருந்தாலும் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக பேசுவார். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இந்தப் புத்தாண்டு அவ்வப் போது உங்களை அலைய வைத்தாலும் புதிய தொடர்புகளை ஏற்படுத்தித் தருவதாக அமையும்.