Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2008 புத்தாண்டு பலன்கள் - மேஷம்!

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
2008 புத்தாண்டு பலன்கள் - மேஷம்!
, சனி, 29 டிசம்பர் 2007 (19:05 IST)
நுணுக்கமாக எதையும் செய்வீர்கள். யாரேனும் தவறு செய்தால் அந்த இடத்திலேயே தட்டிக் கேட்பீர்கள். பண்பாட்டுடனும் பழைய கலைப்பொருட்களையும் பாதுகாக்கும் குணம் கொண்ட நீங்கள் புதுமையையும் விரும்புவீர்கள்.

உங்களின் யோகாதிபதியான குருபகவானும் ராசிநாதனான செவ்வாயும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பாதியில் நின்ற பல வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவும் உண்டு. உங்களின் ராசிக்கு ஆறாவது வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் வீண்பழி, வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். எட்டாவது வீட்டில் சுக்கிரன் நிற்கும் போது இந்த வருடம் பிறப்பதால் கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். அவருக்கிருந்த முன் கோபம், நோய் நீங்கும்.

புது வீட்டில் குடி புகுவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதத்தைக் குறைக்க மாற்ற வழி கண்டுபிடிப்பீர்கள். விளையாட்டு, இசை, நடனம் இவற்றில் பயிற்சி பெற வைப்பீர்கள். பிப்ரவரி மாத பிற்பகுதியிலும் ஜூலை, ஆகஸ்ட் மாதத்திலும் பிள்ளைகளின் உடல்நலன் பாதிக்கும். அவர்கள் பாதை மாறுவதற்கான சூழல் ஏற்படும். படிப்பிலும் கொஞ்சம் மதிப்பெண் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த காலகட்டத்தில் கவனமாக இருப்பது நல்லது.

குரு உங்கள் ராசியைப் பார்க்கும் போது 2008ம் வருடம் பிறப்பதால் உங்களின் அழகு, இளமை கூடும். சேமிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாய் மே மாதம் முதல் ஆகஸ்ட் 10 வரைக்கும் பலவீனமாவதால் அந்த நேரத்தில் சிறு சிறு விபத்தகள், சின்னதாக அறுவை சிகிச்சைகள், உறவினர்களுடன், உடன்பிறந்தவர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். புதன் சாதகமாக இருப்பதால் பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.
உங்கள் ராசி நாதன் தொடர்ந்து பலவீனமாக இருப்பதால் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து குறையும். ஆகஸ்ட் மாதம் வரை வெளி உணவுகள், எண்ணெய் பதார்த்தங்கள், அசைவ உணவுகளை முடிந்த வரை தவிர்க்கப் பாருங்கள். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் போனவர்களெல்லாம் இனி தேடி வந்து பேசுவார்கள். ஜுன் மாதத்தில் பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த பல வழி கிடைக்கும்.

வியாபாரத்தில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் இனி இருக்காது, வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதாக வசூலாகும். புதிய முதலீடுகள் செய்யலாம். ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வழக்கறிஞரை ஆலோசித்து ஒப்பந்தங்கள் செய்துக் கொள்வது நல்லது. பங்குதாரர்களுடன் இதுவரை இருந்து வந்த மோதல்கள் இனி விலகும். ஜுலை, ஆகஸ்ட் மாதத்தில் வேலையாட்களால் பிரச்சனை வந்து நீங்கும்.

உத்யோகத்தில் உயர் அதிகாரிகளிடம் சுமுகமான நட்புறவு ஏற்படும்.இனி வேலைச்சுமை குறையும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும். கன்னிப்பெண்கள் தெளிவாக இனி முடிவெடுப்பார்கள். பெற்றோர்களின் ஆலோசனை உதவிகரமான இருக்கும். காதல் கனியும். புது நண்பர்களால் உற்சாகம் அடைவீர்கள். வேலை கிடைக்கும்.மாணவர்களின் நினைவாற்றல் பெருகும்.கெட்ட நண்பர்களை தவிர்த்துவிடுங்கள். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பாராட்டு வெல்வீர்கள்.கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளெல்லாம் தேடி வரும்.

பரிகாரம் :

உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள பரிக்கல் எனும் ஊரில் உள்ள ஸ்ரீலஷ்மி நரசிம்மரை ஏகாதசி திதி அன்று வழிபடுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil