Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2008 புத்தாண்டு பலன்கள் - சிம்மம்!

க.ப. ‌வி‌த்யாதர‌ன்

2008 புத்தாண்டு பலன்கள் - சிம்மம்!
, சனி, 29 டிசம்பர் 2007 (18:51 IST)
வெள்ளை மனசுக்காரரான நீங்கள், உண்மையே பேசி எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். கலை நய சிந்தனையும், கடின உழைப்பால் எதையும் சாதித்துக் காட்டும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். உங்கள் ராசிக்கு 2வது வீடான தன வீட்டிலில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எல்லா வகையிலும் நன்மையும் உண்டாகும். எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். முகத்தில் தெளிவு பிறக்கும். மன வலிமை கூடும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவரின் சம்பளம் உயரும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் உடல் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். தலைசுற்றல், வயிற்றுப்போக்கு வந்துபோகும்.

குடும்பத்தினருடனும் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. இங்கிதமாகப் பேசி கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதிற்கொண்டு சேமிக்கத் தொடங்குவீர்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். ஜீலை 16.7.2008 முதல் 16.8.2008 வரை அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். மாதத்திலிருந்து பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள்.

சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அடிக்கடி உடல்நலத்திற்காக அதிகம் செலவு செய்ய நேரிட்டதே நிலையில் அக்கறைக் காட்டுங்கள். அரசாங்க விஷடங்களில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதல்போக்கு மறையும்.பூர்வீகச் சொத்து விவகாரங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளிநாட்டிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும். அக்கம், பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும்.

வியாபாரத்தில் போட்டிகளை தகத்தெறிவீர்கள். அதிரடியான முயற்சிகளால் வாடிக்கையளார்களின் வருகை அதிகரிக்கும். அக்டோபர், நவம்பர் மாதங்களில் நல்ல லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலைச்சுமை குறையும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். காதல் கைகூடும். கல்யாணம் சிறப்பாக முடியும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை நீங்கும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். வீண் கிசுகிசுக்கள் விலகும்.

பரிகாரம் :

சென்னை மயிலாப்பூரில் எழுந்தருளியிருக்கும் கபாலீஸ்வரர், கற்பகாம்பாளை வியாழக் கிழமைகளில் சென்று வணங்குங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil