Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2008 புத்தாண்டு பலன்கள் - மீனம்!

க.ப. ‌வி‌த்யாதர‌ன்!

2008 புத்தாண்டு பலன்கள் - மீனம்!
, சனி, 29 டிசம்பர் 2007 (18:35 IST)
கொடை வள்ளல்களே! ஒதுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர்களே! கூட்டுச் சேர்ந்து கோட்டையைப் பிடிப்பவர்களே! உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் எதிலும் முன்னேற்றமடைவீர்கள்.

அரைகுறையாக பாதியில் நின்ற பல வேலைகள் உடனே முடியும். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். சோகமான முகம் மலரும். கணவன், மனைவிக்குள் காரண காரியமே இல்லாமல் காரசாரமான விவாதங்களெல்லாம் வந்ததே! இனி அந்த நிலை மாறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

09.4.2008லிருந்து ராகு லாப வீட்டிற்கு வருவதால் திடீர் பண வரவு, வீடு, வாகன சேர்க்கை உண்டு. பிரபலங்களை சந்தித்து மகிழ்வீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். சகோதர வகையில் இனி பாசப் பிணைப்பு அதிகரிக்கும். சொத்துப் பிரச்னையை சுமுகமாக முடிப்பீர்கள். உங்கள் மகளுக்கு நீங்கள் விரும்பியபடி நல்ல வரன், வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். ஷேர் மூலம் பணம் வரும். ஜீன், ஜீலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் அதிரடி மாற்றங்கள் நிகழும். பிரிந்து சென்ற நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். வராது என நினைத்திருந்த பணம் கைக்கு வரும். வழக்குகள் விரைந்து முடியும். எதிர்பார்த்தபடி நீதி கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ற வீடு கிடைக்கும்.

அக்டோபர்,நவம்பர் மாதங்களில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.வியாபாரத்தில் தடைகள் நீங்கும். இனி வியாபாரம் களை கட்டும். பழைய பாக்கியெல்லாம் வசூலாகும். புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். சொந்த இடத்தில் புதுக்கடை திறப்பீர்கள். ஸ்டேஷனரி, மருந்து, கமிஷன், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உயர் அதிகாரிகள் மதிப்பார்கள். சம்பளம் கூடும். புது வேலைக்கும் முயற்சி செய்யுங்கள். கலைத்துறையினர்களுக்கு நழுவிச்சென்ற வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களுக்கு காதல் கனிந்து வரும். மாணவர்களுக்கு மறதி, அலட்சியம் விலகும். ஜெயிக்க வேண்டும் என்னும் வெறியில் ஆர்வமாகப் படிப்பார்கள். பெற்றோரின் அன்பைப் பெறுவார்கள்.

பரிகாரம் :

மதுரையை அடுத்து ஸ்ரீ வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கும் ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளை சென்று வணங்குங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil