Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மேஷம்

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - மேஷம்

Webdunia

தும்பைப்பூ சிரிப்பும், பலரை வழி நடத்தி செல்லும் அளவிற்குப் பட்டறிவும், தடைகளை தாண்டி எடுத்த காரியங்களை முடிக்கும் திறனும் கொண்டவர்கள் நீங்கள்தான். இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்துக்கொண்டு பலவகைகளில் இன்னல்களை தந்துக்கொண்டிருந்த சனிபகவான் இப்பொழுது 5ம் வீட்டிற்கு அடியெடுத்து வைப்பதால் இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள்.

முகத்தில் தெளிவு பிறக்கும். மன வலிமை கூடும்.குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். குடும்ப வருமானம் உயரும். இங்கிதமாகப் பேசி கடினமான வேலைகளைக்கூட முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதிற்கொண்டு சேமிக்கததொடங்குவீர்கள். அவர்களின் உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். 2008 ஏப்ரல் மாதத்திலிருந்து பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.

பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். சிறப்பாக கல்யாணத்தை முடிப்பீர்கள். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். அடிக்கடி உடல்நலத்திற்காக அதிகம் செலவு செய்ய நேரிட்டதே நிலையில் அக்கறைக் காட்டுங்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த மோதலபோக்கு மறையும். கன்னிப்பெண்கள் சிந்தித்து செயல்படுவார்கள். காதல் கைகூடும். கல்யாணம் சிறப்பாக முடியும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்து விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

வெளிநாட்டிலிருந்தஉறவினர்கள், நண்பர்களின் உதவி கிடைக்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். அதிரடியான முயற்சிகளால் லாபம் உண்டு. வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வேலைச்சுமை அதிகரித்தாலும் விரைந்து முடிப்பீர்கள். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும்.

ஆக இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எல்லாவகையிலும் நல்ல பலன்களையே அள்ளித் தருவார்.

பரிகாரம் : சென்னை ஸ்ரீகாளிகாம்பாளை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். எண்ணங்கள் ஈடேறும்.

Share this Story:

Follow Webdunia tamil