Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கடகம்

சனிப் பெயர்ச்சிப் பலன்கள் - கடகம்

Webdunia

மலர்ந்த முகத்துடன் வந்தாரை உபசரித்து உதவும் குணமும், எந்த ஒரு வேலையையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர்களும் நீங்கள் தான். உங்கள் ராசிக்கு வாக்கு வீட்டில் சனி அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழப்பிக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆனால் சனி பகவான் இப்போது வாக்கு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் வாக்கு வாதம், சின்னச் சின்ன சண்டை வந்து நீங்கும். ஆடை, ஆபரணம் சேரும். பிள்ளைகள் மீது இருந்த வெறுப்புணர்வு நீங்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனுக்கு நல்ல மணப்பெண் அமையும். உங்கள் மகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வராதஎன நினைத்துக் கொண்டிருந்த பணம் கைக்கு வரும்.

கன்னிப் பெண்களுக்கு உடல் உபாதைகள், மன உளைச்சல்கள் நீங்கும். காதல் இனிக்கும். கல்யாணம் முடியும். சனி 11வது வீட்டை பத்தாம் பார்வையால் பார்ப்பதால் மூத்த சகோதர வகையிலும், தாய்வழியிலும் கொஞ்சம் மனக் கசப்புகள் வந்து போகும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதைத் தவிர்க்கவும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை, ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். எதிர்பாராத திடீர்ப் பயணங்களும், அயல்நாட்டுப் பயணங்களும் அதிகரிக்கும்.

மாணவ, மாணவிகள் ஒரு குறிக்கோளுடன் படிப்பீர்கள். வியாபாரத்தில் முன்பைவிட இப்போது அனுபவ அறிவு அதிகம் கிடைக்கும். வேலையாட்களின் போக்கை உணர்ந்து, அதற்கேற்ப அவர்களிடம் வேலை வாங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியவர்களெல்லாம் உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொள்வார்கள். பாராட்டுவார்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சனி மாற்றம் கொஞ்சம் சங்கடங்களை தந்தாலும் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம் : திருச்சி உச்சி பிள்ளையாரையும், தாயுமானவரையும் சென்று வணங்குங்கள். கவலைகளை போக்கி காசபணத்தைத் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil