கலகலப்பாக பேசி சிரிப்பத்துடன், மற்றவர்களின் இன்ப - துன்பங்களில் பங்கெடுப்பீர்கள். செயற்கறிய செயல்களையும் செய்துவிட்டு சாதாரணமாக இருப்பவர்களும் நீங்கள்தான். 5.8.2007 முதல் 25.9.2007 முடிய உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே சனி அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். சனி இப்போது ஜன்மச் சனியாக வருகிறார்.
16.11.2007 முதல் உங்கள் ராசியின் மீதும், ராசியில் அமர்ந்திருக்கும் சனி, கேது ஆகிய கிரகங்களின் மீதும் குருவின் பாக்கியப் பார்வை வீழ்வதால் தடைகள் உடைபடும். தன்னம்பிக்கை துளிர்விடும். பணத்தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். எதிர்பாராத பண வரவு இனி உண்டு. கணவன் மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல் நலத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ஜன்ம சனி வந்திருப்பதால் உப்பு சப்பில்லாத கசப்பு, துவர்ப்பு கொண்ட பத்தியச் சாப்பாடு போல சாப்பிடுவது நல்லது. பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. உங்கள் மகளின் கல்யாண விஷயம் குறித்து புலம்பிக் கொண்டிருந்தீர்களே! இனி நல்லபடியாக முடியும். மனைவிவழி உறவினர்களால் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளப் பாருங்கள். இளைய சகோதரரை அனுசரித்துப் போவது நல்லது. கன்னிப் பெண்களுக்கு திருமணம் சிறப்பாக முடியும். குலதெய்வ கோவிலுக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு,மரியாதை கூடும். மாணவர்கள் இனி அதிக மதிப்பெண் பெறுவார்கள்.பரிசு, பாராட்டும் கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். வேற்று மதத்தினர், நாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடர்புகள் வந்தமையும். வேலையாட்களிடம் கொஞ்சம் கண்டிப்பாக இருங்கள். உத்தியோகத்தில் வரவேண்டிய சலுகையும், உயர்வும் தடையில்லாமல் இனி கிடைக்கும். கூடுதல் சம்பளத்துடன் வேறு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் இனி தேடி வரும்.
இந்தச் சனி மாற்றம் கொஞ்சம் தொய்வு தந்தாலும், திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றலையும் தந்தமைவார்.
பரிகாரம் : திண்டிவனம் அருகிலுள்ள ஸ்ரீ வக்ரகாளியம்மனை சென்று வணங்குங்கள். மனோபயம் விலகி தைரியம் பிறக்கும்.