எங்கும் எப்போதும் உண்மையே பேசும் நீங்கள், மற்றவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களிடம் நட்புறவாடும் குணமுடையவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் நின்ற சனி 5.8.2007 முதல் 25.9.2009 முடிய விரையச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்து பலன் தருவார். இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் உங்களிடமிருந்த பய உணர்வு நீங்கும்.
பிள்ளைகளின் பிடிவாதக் குணம் நீங்கும். எதிர்த்துப் பேசியவர்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உங்கள் பையனுக்கு நல்ல வேலை கிடைக்கும். கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். கணவன் - மனைவிக்குள் சந்தேகத்தின் பொருட்டு, சின்னச் சின்ன சண்டைகள் வரும். அதைப் பெரிதுபடுத்திக் கொள்ள வேண்டாம். உங்களின் தன, பாக்கியாதிபதியான சுக்ரனின் சாரத்தில் 16.8.2008 முதல் 29.8.2009 முடிய சனி செல்வதால் பண வரவு அதிகரிக்கும்.
வீடு, மனை வங்கிக் கடனுதவியுடன் வாங்குவீர்கள். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மற்றவர்களின் விவகாரங்களிலும் அத்துமீறித் தலையிட வேண்டாம். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு உண்டு. காதலைத் தள்ளிப் போடுங்கள். பெரிய பதவிகள் உங்களைத் தேடி வரும்போது யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. நேரம் கிடைக்கும்போது தியானம் செய்யுங்கள். ஒருமுறை குலதெய்வ கோயிலுக்குச் சென்று வாருங்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
மாணவ - மாணவிகள் கணிதம், அறிவியல் பாடங்களில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் நீண்ட நாளாக நினைத்திருந்த மாற்றங்களை உடனே செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு உண்டு. ரியல் எஸ்டேட், உணவு, எலக்ட்ரானிக்ஸ், ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு. போட்டிகள் கடுமையாக இருந்தாலும் ஈடுகொடுத்து வெற்றி பெறுவீர்கள். உத்யோகத்தில் மதிப்பு மரியாதைக் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும். புதிய சலுகைகள் கிடைக்கும்.கலைஞர்களுக்கு வீண் வதந்திகள் வரும். சம்பளப்பாக்கி கைக்கு வரும்.
இந்தச் சனிப்பெயர்ச்சி உங்களை வெளியுலகுக்கு கொண்டு வருவதுடன், புதிய தொடர்புகளையும் அறிமுகப்படுத்துவதாக அமையும்.
பரிகாரம் : திருநள்ளாறு சனிஸ்வர பகவானை நளதீர்த்தத்தில் நீராடி சென்று வணங்குங்கள். சோகங்கள் நீங்கி எதிலும் மகிழ்ச்சி தங்கும்.