தோல்விகளை கண்டு துவளாமல், விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறுபவர்கள். இப்போது உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் அமரப் போகும் சனி அட்டமத்துச் சனியாக இருந்து செயல்படப் போகிறார். கணவன்-மனைவிக்குள் வீண் விவாதங்களும், மனஸ்தாபங்களும் இருந்து வந்ததே, இனி தொல்லைகளைக் குறைப்பார். ஒருவரையருவர் அனுசரித்துப் போகப் பாருங்கள். தாம்பத்யம் இனிக்கும்.
உங்கள் ராசியின் மீது சனியின் பார்வை இனி விலகும். எனவே உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். இருந்தாலும் இனி சனியின் மறைமுகத் தாக்குதல்கள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். ஓரளவு பண வரவு உண்டு. அனாவசிய, ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கப் பாருங்கள். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். உடன் பிறந்தவர்களிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும். கன்னிப் பெண்கள் இனி சிந்தித்துச் செயல்படுவீர்கள்.
பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. காதல் விவகாரங்களில் நிதானம் தேவை. புதிய வேலை கிடைக்கும். வாகன விபத்துகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு முடிவையும் பலமுறை யோசித்துச் செயல்படப்பாருங்கள். கிடைக்கின்ற நேரங்களில் தியானம், யோகாசனம் செய்யப் பாருங்கள். புது நண்பர்களிடம் அளவாகப் பழகுங்கள். ஆடை ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பிகளின் உதவி கிட்டும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவெடுக்காதீர்கள்.
மாணவ-மாணவிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிரடித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். இரும்பு, எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது சலுகைகள் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். கலைஞர்கள் பரபரப்புடன் காணப்படுவீர்கள். வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள்.
இந்தச் சனி மாற்றம் இதுவரை இருந்த பேரிழப்புகளிலிருந்து உங்களை மீட்பதுடன், சமயோசிதமாக செயல்பட வைப்பதுடன்,மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.
பரிகாரம் : பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரை சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இழப்புகள் விலகி கேட்டதெல்லாம் கிடைக்கும்.