Religion Astrology Remedy 0710 31 1071031055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒருவரின் இன்னல்களுக்கு ஜோதிட சாஸ்திர பரிகாரங்கள்!

Advertiesment
இன்னல் ஜோதிடம் சாஸ்திரம் பரிகாரம்

Webdunia

உலகில் எந்த ஒன்றும் அழிவதில்லை. அதேபோன்று, ஏற்கனவே இல்லாத ஒன்றை புதிதாக சிருஷ்டிக்கவும் இயலாது. எப்போதும் உள்ள ஒன்று காலத்தின் விதிகளுக்கு ஏற்ப, உருவத்திலும், உள்ளடக்கத்திலும் உருமாறிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்த தினத்தில் சந்திரனையும், சூரியனையும் பார்க்கிறீர்கள், காலத்தின் கட்டளையால் அவைகள் மறைகின்றன. பின் மீண்டும் மறுநாள் தோன்றுகின்றன. உறிந்து புராணங்களில் மறு - உயிர்த்தல், மறு பிறப்பு பற்றிய இந்தக்கோட்பாட்டிற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கின்றன.

மனிதன் இப்பிறவியில் செய்யும், பாவ புண்ணியத்திற்கேற்ப அவனின் மறுபிறப்பு நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தப் பிறவியில் அவன் செய்யும் புண்ணிய காரியங்கள், அடுத்த பிறவியில் அதிர்ஷ்டமான ஜாதகம் அமையுமாறு ஒரு கணத்தில் அவனை பிறக்கவைக்கிறது. மறுபிறவியில் இந்தப் பூமியில் வாழும் அவன் வாழ்வு சந்தோஷங்களால் நிறைவடையும். மாறாக பாவ காரியங்களை செய்தவனின் அடுத்த பிறவி வாழ்வு, அதற்கான சோதனைகளை எதிர்கொள்ள வேண்டியதாக அமைந்துவிடும்.

பிறக்கும் அந்தக் கணத்திலேயே, கிரகங்கள் அவன் வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானித்து விடுகின்றன என்பதை ஜோதிட சாஸ்திரக் கோட்பாடுகள் நிச்சயிக்கின்றன. ஆகவே ஜோதிட சாஸ்திரம், ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளைக் கொண்டு வாழ்வின் நிலைகளை அனுமானிக்கும் சாத்தியப்பாடுகள் உடையதாய் இருக்கிறது.

குழந்தை தாயின் கருவறையிலிருந்து வெளிவந்து, தரையைத் தொடும் போது கிரகங்களின், நட்சத்திரங்களின் தாக்கம் பெற்று, அதுமுதல் அதன் எதிர்காலத்தை இவைகளே வடிவமைக்கின்றன. ஜாதகம் என்று நாம் பொதுவாக குறிப்பிடுவது என்னவெனில், குழந்தை பிறப்பின் போதான கிரகநிலைகளைப் பற்றிய தெளிவான வாசிப்பாகும். மேலும் இந்த கிரகங்களை குழந்தையின் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சரியாக கணித்தல் என்பதே ஜாதகத்தின் விசேஷம்.

இருண்ட அறையை, சிறு ஜோதி வெளிக்காட்டுவது போல், ஜோதிடம் / ஜாதகம் ஒருவனின் வாழ்க்கையில் தெரியாத ஒன்றை அவனுக்கு புரிய வைக்க உதவுவது.

சரியான நேரம், சரியான இடம் இவற்றைக் கொண்டு குறிக்கப்பட்ட ஒருவனின் ஜாதகம், அவனின் வாழ்க்கையையும், விதிகளையும், மிகச் சரியாகவே கணிக்கும்.

குழந்தை பிறக்கும் நேரத்தில் நவக்கிரகங்களின் நிலைகள், அது இவ்வுலகில் தங்கி வாழும் அனுபவங்களை முன் அனுமானித்து விடுகிறது. நவக்கிரகங்கள் ஒரு தனிமனிதனுக்கு நல்லதை மட்டும்மேயோ அல்லது கெடுதல்களை மட்டுமேயோ செய்வதில்லை, சில கிரகங்கள் சில நிலைகளில் இருக்கும்போது சோதனைக்கால சுமைகளையோ, கஷ்டங்களையோ ஒரு மனிதனுக்கு அளிக்கிறது. இந்திய ஜோதிட சாஸ்திரம் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசுவதில்லை, அதற்குப் பரிகாரங்களையும், தீர்வுகளையும் கூறுகிறது.

கிரகங்களின் வீழ்ச்சிக்காலங்களிலோ, அல்லது வேறு ஸ்தானங்களை அடையும் போதோ, அவைகளின் இயக்கத்தை, சோதிடவியல் கணக்குகளின் மூலம் கணக்கிட்டு, எந்த ஒரு தீமையான விளைவையும் முன்கூட்டியே கணிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கான பரிகாரங்களையும் சொல்லிவிடுவதில்தான் சோதிடத்தின் சிறப்பே அடங்கியிருக்கிறது. ஒரு பாதசாரியை மழையிலிருந்தும், கடும் வெயிலிலிருந்தும் காப்பாற்றும் குடை போலவோ, சந்தனம் போலவோ ஜோதிடம் கூறும் பரிகாரங்கள், ஒரு தனி மனிதனை கிரகஸ்தானங்களால் தீர்மானிக்கப்படும், தீமைகளிலிருந்தும், சோதனைகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

ஜோதிட சாஸ்திரம் ஒரு பொதுப்படையிலான தீய விளைவுகளை கணித்து பரிகாரம் அளிக்கிறது என்றால், இந்திய தாந்திரிகத் தத்துவம் ஒரு குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு பரிகாரங்களை அளிக்கிறது. உதாரணமாக கல்யாணம் நின்று போதல், குழந்தை பாக்கியமின்மை போன்ற குறிப்பிட்ட பிரச்சனைகள். பண்டையகால ரிஷிகளால் உருவாக்கப்பட்ட தாந்திரிக பரிகார முறைகள் - கிரகங்களின் ஸ்தானம் பற்றிய சரியான கணிப்பு முறையில் அவற்றின் பலம், பலவீனம் ஆகியவற்றை கண்டுணர்ந்து நல்ல முடிவுகளைக் கொண்டதாக இருக்கின்றன.

ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டுமே கருத்தில் கொள்ளும்போது, ஜாதகத்தின் ஒரு குறிப்பிட்ட கிரகஸ்தானங்களையும் இந்த கிரகங்களின் மீதான மற்ற ஸ்தானாதிபதிகளின் தாக்கங்களையும், மற்ற ஸ்தானாதிபதிகளின் மீதான இந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கங்களையும் மிகச் சரியாக கணிக்க வேண்டும். இப்படி கணித்தால் மட்டுமே, ஒரு மனிதனின் ஆசைப்படக் கூடிய இலக்கை எட்டுவதற்கு, ஜாதகம் பயனுள்ளதாய் இருக்கும். ஆகவே ஜாதகம் பார்ப்பவர்கள் ஒரு திறமையான மருத்துவரைப் போல் இருக்க வேண்டும் இதுவே அடிப்படை நிபந்தனை.

பணத்திற்காக ஜாதகம் பார்க்கும் போலி சோதிடர்களால், தெளிவான பகுப்பாய்வை செய்ய முடியாது. இது போன்ற போலி - சோதிடம், பலரை பல தீமைகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ஒரு திறமையான உண்மையான ஜோதிடனின் கணிப்பின் படி தீமைகளைக் கண்டுணர்ந்து, அவர் கூறும் பரிகாரங்களை செய்துவந்தால், அவன் வாழ்வை புரிந்து கொண்டு சந்தோஷமான வாழ்வை திட்டமிட்டு நடத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil