ஈழ மக்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்காதது ஏன்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நாடுகள் கண்டனக் குரல் எழுப்பியும், இந்திய அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வராத நிலை ஏன் இருக்கிறது?
பதில்: இந்தியாவின் ராசிப்படி (கடகம்) தற்போது ஏழரைச் (பாதச்) சனி நடந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது கடகத்தில் கேதுவும் அமர்ந்துள்ளதால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகிறது. முரண்பாடான நிலை காணப்படும்.
பொதுவாக ஒரு நாட்டின் ராசியையோ, ராசிக்கு முன்/பின் பாவ கிரகங்கள் இருந்தால் இந்த மாதிரி சில முடிவுகள் எடுப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்.
அந்த வகையில் இந்தியாவின் ராசியான கடகத்தில் கேதுவும், அடுத்த வீடான சிம்மத்தில் சனியும் அமர்ந்திருப்பதால் ஈழத் தமிழர்கள் விடயத்தில் இதுபோன்ற நிலையை இந்தியா எடுத்திருக்கலாம்.
இந்தியாவின் இந்த நிலை தொடரும் எனக் கூற முடியாது. ஏனெனில் வரும் அக்டோபரில் இந்தியாவுக்கான ஏழரைச் சனி விலகுகிறது. அப்போது ஈழத் தமிழர்கள் விடயத்தில் ஆதரவான மாற்றம் வரும்.