அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தால் ஆட்சி கவிழும் என்றீர்கள்? ஆனால் கவிழவில்லை?
, சனி, 31 ஜனவரி 2009 (15:53 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:அரசியலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியின் முக்கிய நபர்களின் ஜாதக அமைப்பை பார்க்கும் அதே நேரம் எதிர்க்கட்சி பிரமுகர்களின் ஜாதக அமைப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.திருமங்கலம் தேர்தலில் கூட வேட்பாளர்களின் ஜாதகம் கிடைக்கவில்லை என்பதால் கட்சித் தலைமை, வேட்பாளர்களின் பெயரையும் வைத்து, அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறியிருந்தோம். ஆளுங்கட்சியினரின் ஜாதக அமைப்பைவிட எதிர்க்கட்சியின் ஜாதக அமைப்பு பலவீனமாக உள்ளதால் ஆட்சி தொடர்கிறது. அணு சக்தி ஒப்பந்தம் மீதான தீர்மானத்தில் கூட இழுபறி நிலை காணப்பட்டு இறுதியிலேயே ஒப்பந்தம் நிறைவேறியது. அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஆளும் கட்சியினரின் ஜாதகத்தை மட்டும் கணித்திருந்தோம். அதன்படி இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் ஆட்சி கவிழும் எனக் கூறியிருந்தோம்.ஆனால் அதே காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜாதகத்தைக் பார்க்கும் போது, ஆட்சி செய்பவர், அவர் அருகில் இருப்பவர் ஜாதகத்தை விட பலவீனமாக இருக்கிறது. எனவே ஆளுங்கட்சி ஆட்சிக் கட்டிலில் தொடரக் கூடிய வலிமையை பெற்று விடுகிறது. எப்படிப் பார்த்தாலும் அணு சக்தி ஒப்பந்தத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடரும். எதிர்காலத்தில் குரு வக்ர காலம், சனி வக்ர காலத்தில் இப்பிரச்சனை நிச்சயம் பூதாகரமாக உருவெடுக்கும்.