Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளுமா?

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்படி ஒருவேளை போர் மூண்டால் அது கார்கில் போன்ற ஒரே பகுதியை கையகப்படுத்தும் வகையில் இருக்குமா அல்லது 1971இல் நடந்தது போல் குறிப்பிட்ட காலத்திற்கு நடக்குமா அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்கு பயங்கரமாக உருமாறுமா?

அணு ஆயுதத்தை பயன்படுத்தும் அளவுக்கு போர் செல்லாது என்றாலும், கடுமையாக உருப்பெறுவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன. ஏனென்றால், அடுத்தடுத்து வரும் கிரக அமைப்புகள் சரியாக இல்லாததால் ஜனவரி 14 முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் போர் ஏற்படலாம்.

மேலும் சனியின் பார்வைக்குள் சூரியன், செவ்வாய் ஆகியவை வருவதால் அரசியல் நெருக்கடி ஏற்படும். போருக்கான நிர்ப்பந்தங்கள், போர் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கு சாத்தியங்கள் உண்டு. எனவே போர் உக்கிரமடைந்தாலும் அணு ஆயுதங்களை பிரயோகிக்கும் அளவுக்குச் செல்லாது. ஆனால் போரில் இந்தியாவுக்கு சாதகமான விடயங்கள் அதிகம் இருக்கும்.


போர் ஏற்பட்டால் இந்தியாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறியிருக்கிறீர்கள். இதே காலத்தில் உலகின் பிற இடங்களிலும் போர் ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதா?

சாத்தியக்கூறுகள் நிறைய உண்டு. அதேபோல் இயற்கை சீற்றங்களான சூறாவளி, நிலநடுக்கம் ஆகியவை ஏற்படும். ஜனவரி 14 முதல் ஏப்ரல் வரை இதே கால கட்டம் நீடிக்கும். மே மாதமும் அது தொடரலாம். உலகெங்கும் போருக்கு உரிய காலம் இது என்று கூறும் வகையில்தான் கோள்களின் அமைப்புகள் உள்ளது.

ஆயுதங்களால் மோதிக் கொள்வது ஒரு வகை என்றால், நாட்டிற்குள்ளேயே எதிர்ப்புகள் மூள்வது, பொருளாதார ரீதியான மோதல் உள்ளிட்டவைக்கு மற்றொரு வகைப் போல் போல் காட்சியளிக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்?

ஜனவரி மாதத்திலேயே போருக்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்று கூறியுள்ளீர்கள். போர் இந்தியாவுக்கு சாதகமாக இருந்தால் அது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு முன்னேற்றத்தை அளிக்குமா?

அப்படிக் கூறி விட முடியாது. போரின் முடிவு எப்படி இருந்தாலும், தேர்தல் தேதியில் வரும் ஜோதிட அமைப்பு, கட்சித் தலைமையின் ஜாதகம் உகந்ததாக இருந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி கிடைக்கும்.

போர் தொடுத்து வெற்றி பெறும் அவசியமும் இருக்காது. அதேவேளை போர் தொடுத்தாலும் தோல்வி அடையக் கூடிய சூழலும் ஏற்படும்.

ஒருவேளை போர் ஏற்பட்டால் தாக்குதலுக்கு உள்ளாகும் இந்திய நகரங்கள்?

போர் ஏற்பட்டால் மராட்டியமும், டெல்லியில் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும். பஞ்சாப்பின் சில பகுதிகளும் பாதிப்படையலாம். அந்தந்த மாநிலங்களுக்கு உரிய கிரகங்கள் சரியாக இல்லாததே இதற்கு காரணம்.

Share this Story:

Follow Webdunia tamil