கச்சா எண்ணெய் விலை மேலும் குறையுமா அல்லது உயருமா?
, புதன், 31 டிசம்பர் 2008 (18:21 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:கச்சா எண்ணெய் சர்வதேச அளவில் கடும் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் உயரத் துவங்கி 150 டாலரை நெருங்கிய ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, அதிரடியாகக் குறையத் துவங்கி 40 டாலருக்கும் கீழாக சரிந்து விட்டது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் சரிவைச் சந்திக்குமா அல்லது படிப்படியாக உயர்ந்து முன்னேறுமா என்ற கேள்வியுடன் எமது ஜோதிடர் க.ப.வித்யாதரனைச் சந்தித்தோம்:சனி, ராகு ஆகியவை கச்சா எண்ணெய்க்கு உரிய பிரதான கிரகங்கள். சனி தற்போது பூரத்தில் (சுக்கிரன் நட்சத்திரம்) இருந்து வருவதால் கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும். இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையும் படிப்படியாகக் குறையும்.