Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு பெண் உலக அழகி பட்டத்தை வெல்வார் என்று ஜாதகத்தை வைத்துக் கூற முடியுமா?

ஒரு பெண் உலக அழகி பட்டத்தை வெல்வார் என்று ஜாதகத்தை வைத்துக் கூற முடியுமா?
, புதன், 31 டிசம்பர் 2008 (17:48 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

நிச்சயம் கூற முடியும். ஒரு பெண் பிறக்கும் காலகட்டம் சிறப்பாக இருக்க வேண்டும். ஏனென்றால் அழகு, யவனம், இளமை இதற்கெல்லாம் அதிபதிகளாக விளங்குவது சந்திரன், சுக்கிரன். இதில் சந்திரன் வசியத்தை கொடுக்கும். கண்கள் காந்தத்தைப் போல் பார்ப்பவரை இழுக்கும். இதேபோல் சுக்கிரனும் பல அழகுகளைக் கொடுக்க வல்லவர்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் அல்லது சுக்கிரன் ஓரையில் அல்லது சுக்கிரன் லக்னத்தில் இருக்கும் போது அல்லது லக்னாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்திருக்கும் போது அல்லது சுக்கிரன் ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் போது அல்லது லக்னத்தை சுக்கிரன் பார்க்கும் போது பிறந்த பிள்ளைகள் எல்லாம் அளவெடுத்தாற் போல் அங்க அவையங்களை பெறலாம். நீளமான விரல்கள், உடலுக்கு ஏற்ற காதுமடல், கவர்ச்சிகரமான கண்கள் அமையப் பெறுவர்.

சாதுர்யமான புத்திக் கூர்மைக்கும் உரிய கிரகம் சந்திரன். உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டாலும், அதில் கேள்வி-பதில் சுற்றில் சிறப்பாக பதிலளித்தால்தான் அழகிப் பட்டத்தை வெல்ல முடியும். அங்க அழகு மட்டும் போதாது அறிவுப்பூர்வமான அணுகுமுறையும் தேவை என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் சுற்றில் வெல்ல சிறப்பாக அதேசமயம் விரைவாக பதிலளிக்க வேண்டும்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு உடனடியாக பதிலைத் தர உதவுவது, நவகிரகங்களில் வேகமாக நகரும் சந்திரன். அந்த பதில் சரியான முறையில் வெளிப்படுவதற்கு உதவுவது புதன். உலக அழகியாக வேண்டுமென்றால் சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் பங்களிப்பு தேவை.

குரு லக்னத்தை பார்த்தால் கோபப்பட்டாலும் அந்த ஜாதகர் அழகாகவே தெரிவார். கோபத்தில் சீற்றம் இருக்காது. இப்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு பலனைத் தருகிறது. அதேபோல் பிறக்கக் கூடிய ஓரை சிறப்பாக இருக்க வேண்டும்.

இதேபோல் பிறக்கும் கிழமையும் மிகவும் முக்கியம். திங்கள், புதன், வெள்ளி ஆகியவை சாத்வீகமான கிழமைகள் எனப்படுபவை. இந்த தினங்களில் பிறக்கும் பெண்களுக்கு, பெண்மைக்குரிய குணம் அதிகம் காணப்படும்.

பல கிரகங்களின் கூட்டமைப்பு சரிவிகிதமாக அமைந்தால் உலக அழகிப் பட்டம் வெல்லலாம். இதுபோன்ற கூட்டமைப்பு உள்ள ஜாதகம் எப்போதாவதுதான் அமையும். மேலும், கிரகங்களின் கூட்டமைப்பு இருந்தாலும், நல்ல தசை இல்லாவிட்டால் அவர்கள் புகழின் வெளிச்சத்திற்கு வர மாட்டார்கள்.

உதாரணமாக நல்ல அழகு இருந்தாலும், அவர்களது பெற்றொர் அழகிப் போட்டிக்கு அப்பெண்ணை அனுப்ப மறுக்கலாம். இல்லையென்றால் அழகிப்போட்டிக்கு தேவையான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். இவையெல்லாம் கிரகங்களின் குறுக்கீடு.

லக்னாதிபதியை பாவ கிரகம் பார்த்தாலோ அல்லது 6வது, 8வது வீட்டிற்கு உரிய தசை குறிப்பிட்ட வயதில் (17 முதல் 23) நடந்தாலோ அப்பெண்களால் அழகிப் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழல் உருவாகும்.

எனவே, நல்ல கிரக அமைப்பில் பிறந்தாலும், நல்ல தசையும் குறிப்பிட்ட வயதில் நடந்தால் மட்டுமே உலக அழகிப் பட்டம் வெல்ல முடியும். உலக அழகிப் பட்டம் என்பது ஒட்டுமொத்த கிரகங்களின் கூட்டமைப்பில் கிடைக்கக் கூடிய வெற்றி/ஒத்துழைப்பு என்று கூறலாம்.

மேலும், உலக அழகிப் போட்டிகள் நடைபெறும் தினத்தன்று (இறுதிப்போட்டி உட்பட) சந்திராஷ்டமம் போன்ற இடர்பாடுகள் காணப்பட்டாலும் வெற்றி நூலிழையில் தவறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil