Religion Astrology Quesionanswer 0812 18 1081218066_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

Advertiesment
விஸ்வநாதன் ஆனந்த் செஸ் ஜோதிடம் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் டிசம்பர் 11 1979 புதன்
, வியாழன், 18 டிசம்பர் 2008 (17:25 IST)
டிசம்பர் 11ஆம் தேதி 1979இல் ஆனந்த் பிறந்துள்ளார். அவரது ஜனன ஜாதகத்தை வைத்துப் பார்க்கும் போது அவருக்கு அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி என்பது தெரிய வருகிறது.

பொதுவாக விருச்சிக ராசிக்காரர்கள் மூளை பலம் அதிகம் உள்ளவர்களாகத் திகழ்வார்கள். தொடர்ந்து சாதிப்பார். இதேபோல் அனுஷம் நட்சத்திரம் உடையவர்கள் நுணுக்கமான புத்தி கொண்டவர்களாக இருப்பர்.

சதுரங்க (செஸ்) விளையாட்டுக்கு உரிய கிரகமாஜோதிடத்தில் புதனைக் கூறுவர். கல்விக்கு உரியவரும் அவரே. ஆனந்தின் ஜாதகத்தில் புதன் துலாத்தில் உள்ளது பெரிய விஷேசமாகும். அதேபோல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய 3 கிரகங்களும் ஒன்றாக இருப்பதும் ஆனந்திற்கு சிறப்பான பலன்களை அளித்து வருகிறது.

அந்த 3 கிரகங்களின் கூட்டணியை சனி பார்ப்பதால் அவருக்கு இயல்பாகவே இருக்கும் நுணுக்கமான மூளை மேலும் பலம் பெற்றுள்ளது. எனவே ராஜதந்திரமாகவும் அவர் செயல்படுவார். அடுத்து வரும் ஆண்டுகளிலும் ஆனந்த் தொடர்ந்து சாதிப்பார்.

Share this Story:

Follow Webdunia tamil