Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாலேகான் தாக்குதலில் “ஹிந்து தீவிரவாதம்” என்ற சொல் பயன்படுத்தப்படுவது பற்றி?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

மாலேகான் தாக்குதலில் “ஹிந்து தீவிரவாதம்” என்ற சொல் பயன்படுத்தப்படுவது பற்றி?
, வெள்ளி, 12 டிசம்பர் 2008 (15:58 IST)
மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் துறவி உட்பட மேலும் சில சாமியார்கள், பயங்கரவாத தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது குறித்தும், இவ்வழக்கின் வருங்காலப் போக்கு குறித்து விரிவாக கூறுங்களேன்...

இவை அனைத்தும் குரு நீச்சமடைய உள்ளதால் (டிசம்பர் 6 முதல்) ஏற்பட்ட விளைவுகளே. ஏனெனில் குரு நீச்சமடையும் போது அரசாங்கம் ராஜ தந்திரத்தைக் கையாளும். இவ்விடயத்தில் மட்டுமின்றி தேர்தல் காலத்தில் ஆளும் அரசு ஏகப்பட்ட குறுக்கு வழிகளைப் பின்பற்றி அதனை சந்திக்கும்.

சில நேரத்தில் அடிமட்டம் வரையிலான நடவடிக்கைகளிலும் ஆளும் அரசு இறங்கத் தயங்காது. ஏனென்றால் ஜனநாயகத்திற்கு உரிய கிரகமான குரு நீச்சமடைவதால்தான்.

அப்படி இருக்கும் போது தற்போது நடப்பதை எல்லாம் முன்விளைவுகளாக கருத வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil