இந்தியா-இங்கி. ஒருநாள் தொடர்: சாம்பியன் யார்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் ராஜ்கோட், இந்தூர் ஆகிய நகரங்களில் நடந்த முதல் 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
மீதமுள்ள 5 போட்டிகளில் இரண்டில் நிச்சயம் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரைக் கைப்பற்ற முடியும். ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற அடுத்த 5 போட்டிகளில் நான்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடைசி 5 போட்டிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று ஜோதிட க.ப.வித்யாதரனிடம் கேட்ட போது அவர் அளித்த பதில்:
நவம்பர் 20 -கான்பூர் - இந்தியாவிற்கு சுமாரான நிலையே காணப்படுகிறது.
நவம்பர் 23 -பெங்களூரு - நமக்கு சாதகமான நிலை காணப்படுவதால் வெற்றிக்கு வாய்ப்பு.
நவம்பர் 26 -கட்டாக் - இதில் இந்திய வீரர்கள் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துவர்.
நவம்பர் 29 -குவஹாத்தி - இந்தியாவுக்கு மிகவும் சாதகமான சூழல் நிலவும்.
டிசம்பர் 2 -புதுடெல்லி - இதிலும் இந்தியாவுக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது.
எனவே ஜோதிடர் கணிப்பின்படி பெங்களூரு, குவஹாத்தி, டெல்லியில் இந்தியா வெற்றி பெறும் என்பதால், 5-2 என்ற (முதல் இரண்டு வெற்றியையும் சேர்த்து) போட்டிக்கணக்கில் இந்தியா தொடரை வெல்லும் என நம்பலாம்.