Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை பயன்படுத்துவது ஏற்றதா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்-

கம்ப்யூட்டரில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை பயன்படுத்துவது ஏற்றதா?
, செவ்வாய், 18 நவம்பர் 2008 (17:47 IST)
என்னைத் தேடி வரும் பலர் கணினியில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை எடுத்து வருகின்றனர். ஆனால் அவர்கள் பிறந்த தேதி, நேரம் இவற்றை கணக்கிட்டு பார்க்கும் போது கணினி ஜாதகத்தில் சில தவறுகள் நடத்திருப்பது தெரியவந்தது. பல இடங்களில் மலிவான மென் பொருட்களைக் கொண்டு ஜாதகம் கணிக்கின்றனர். இதன் காரணமாகவே தவறுகள் ஏற்படுகிறது.

எழுத்துப் பூர்வமாக ஜாதகத்தை எழுதும் போது அதற்கென்று தனி உயிர்ப்பு சக்தி உள்ளது என்பதே உண்மை. இதையறிந்தவர்கள், கணினி மூலம் ஜாதகம் கணித்திருந்தாலும், தங்களுக்கு எழுத்துப்பூர்வமாக ஜாதகம் உருவாக்கித் தருமாறு கேட்கின்றனர்.

கணினி ஜாதகத்தில் அதி நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், சில நேரங்களில் தவறுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது. ஏனெனில் அவர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் மென்பொருட்களில் தவறுகள் இருக்கிறது.

ஒருசிலருக்கு ராசி மாறுகிறது, பிறருக்கு நட்சத்திரம் தவறாக கூறப்படுகிறது, மேலும் சிலருக்கு தசாபுக்திகள் தவறாக கணிக்கப்படுகின்றன. அதனால் கணினி ஜாதகங்களை, ஜோதிடரிடம் காண்பித்து அது சரியாக கணிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் அதனைப் பயன்படுத்தலாம்.

Share this Story:

Follow Webdunia tamil