Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராசிக்கும் ரத்த வகைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
ராசிக்கும் ரத்த வகைக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?
, செவ்வாய், 26 ஆகஸ்ட் 2008 (15:06 IST)
உண்டு. ரத்தம் என்று எடுத்துக் கொண்டாலே அதற்குரிய கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் நீச்சமடையும் போது ரத்தம் நீர்த்துப் போகும். செவ்வாய் வலுவிழந்தவர்களின் ரத்தத்தின் அளவு குறைவாக இருப்பது, பலவீனமாக இருப்பது போன்றவை இருக்கும்.

9 கிரகங்கள் இருக்கிறது. 9 கிரங்களுக்கும் முறையே 3 நட்சத்திரங்களை ஒதுக்கி இருக்கிறார்கள். பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய மூன்றும் சனியின் நட்சத்திரம். இந்த ராசிக்காரர்களில் பலரும் ஏ1 அல்லது ஏ பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.

webdunia photoWD
சிம்மம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் பி பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.

ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் ஒ பாசிடிவ் காரர்களாக இருப்பார்கள்.

ரத்த வகையைப் பற்றி இதுவரை ஆராய்ச்சி மேற்கொண்டு கொஞ்சம் கண்டுபிடித்து வைத்துள்ளோம்.

இன்னும் இதில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான ஜாதகங்கள் பார்க்க வேண்டி உள்ளது. அதன் பின்னர்தான் இதுபற்றி இன்னும் விரிவாகக் கூற முடியும்.

ஆனால் ஜாதகத்தைப் பார்த்தே ரத்த வகையைச் சொல்லிவிடலாம். தாய்க்கும், தந்தைக்கும் தொடர்பில்லாத ரத்த வகையில் கூட பிள்ளைகள் பிறக்கின்றன. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒரு ஜாதக அமைப்பைப் பார்த்து அவர்களது ரத்த வகையை எளிதாகத் தீர்மானித்து விடலாம். அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரக் காரர்களில் ஏ1 பாசிடிவ் காரர்கள் அதிகமாக இருப்பார்கள்.

இது இப்போதைக்கு மட்டுமே. இது பற்றி மேலும் விரிவாகப் பிறகு கூறுகிறேன்.

Share this Story:

Follow Webdunia tamil