Religion Astrology Quesionanswer 0806 21 1080621052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பா.ம.க. என்ன செய்யும்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

Advertiesment
பா.ம.க. PMK
, சனி, 21 ஜூன் 2008 (17:12 IST)
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அதன் நிலை நன்றாக உள்ளது. வலுவடையும். அதன் சின்னம் மாங்கனி, மாம்பழத்தை எடுத்துக் கொண்டால் மாமரம் பாலுள்ள மரம். அது சில கிரகாதிக்கத்திற்கு உட்பட்டு வருகிறது. அதனால் நாளுக்கு நாள் இக்கட்சியின் பலம் கூடுமே தவிர குறையாது.

மாமரத்திற்குரிய நட்சத்திரம் மூலம். மூலம் என்றால் தனுசு ராசி. 8இல் செவ்வாய் நடந்து கொண்டிருக்கிறது. வரும் 23ஆம் தேதி வரை இந்த நிலை. அதன் பிறகு பா.ம.க.வின் கை ஓங்கும்.

போன தேர்தலில் பா.ம.க. அதிக தோல்வியை சந்தித்ததே?

போன தேர்தலின் போது பா.ம.க.வின் கிரக நிலை மோசமாக இருத்து. தனுசு ராசிக்கு அட்டமத்து சனி நடந்து கொண்டிருந்தது. அதனால்தான் அவர்கள் குறைவான வாக்குகளை பெற்றனர்.

தற்போதும் அந்த ராசிக்கு நல்ல நேரம் இல்லை. டிசம்பர் 7ஆம் தேதியில் இருந்துதான் தனுசு ராசி வலுவடையும். அந்த கட்சியின் நிறுவனர், மற்ற முக்கிய தலைவர்களின் கிரக அமைப்பை வைத்துப் பார்க்கும்போது டிசம்பர் 7ஆம் தேதியில் இருந்துதான் பா.ம.க. வலுவடையும்.

ஒரு வலுவான கூட்டணி அமைக்கவும் காரணமாக இருக்கும். இக்கட்சி இடம் பெறும் கூட்டணி நிறைய தொகுதிகளில் வெற்றி பெறவும் காரணமாக இருக்கும்.

அதிமுக - பாஜகவுடன் பா.ம.க. கூட்டணி சேருமா?

வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil