கோயில்கள் கிழக்கைப் பார்த்தபடி இருக்கும். சில இடங்களில் மாறுபட காரணம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும். ஒவ்வொரு தலத்தையும் பிரதானமாக எடுத்து ஒரு சித்தர் செய்திருப்பார். பின்னர் வழிவழியாக வந்த மன்னர்கள் அதனை புதுப்பித்து பாதுகாத்து வந்தனர்.
எனவே ஒவ்வொரு இடத்திற்கும் அதற்கென ஒரு பழக்க வழக்கம் இருக்கும். அதைப் பொருத்து சில தெய்வங்கள், தேவதைகள் மாற்று திசையை நோக்கி பார்த்தபடி இருப்பார்கள்.
பொதுவாகவே ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு திசையில் இருக்கும். தட்சிணாமூர்த்தி என்றால் தெற்கு நோக்கி, துர்கை நோக்கி என்றால் வடக்கு நோக்கி என்று நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது.
திருவக்கரை வக்கர காளியம்மன் கோயிலில் எல்லாமே விலகி விலகி இருக்கும். கொடி மரம், அதிகார நந்தி ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். ஆனால் வக்ரகாளி அம்மன் கோயிலில் நேர்மாறாக இருக்கும்.
சிதம்பரத்தில் ஒரு அறையையே மூடி வைத்திருப்பார்கள். நந்தனாருக்கு காட்சி அளித்த இறைவன். அங்கு இறைவனேப் பேசி எல்லா திசையிலும் நான் இருக்கின்றேன். நீங்கள் எங்கும் பூஜை நடத்த கடவுவது என்று கூறுகிறார்கள்.