ராசி பலன் கூறும்போது ஒவ்வொரு ராசிக்காரருக்கும் அடை மொழி கூறுவது எல்லோருக்கும் பொருந்துமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
எல்லா ராசிக்காரர்களுக்கும் பொருந்தும். இதில் கிரக அமைப்பை வைத்து சதவீதம் அளவிற்கு வேண்டுமானால் மாறுபடலாம். எதிர்கால சிந்தனை, தொலை நோக்கு சிந்தனை, உள்ளுணர்வு திறன் போன்றவை எல்லாம் மேஷத்திற்கு உண்டு.
நல்ல கிரக அமைப்பு, குரு உச்சம், செவ்வாய் ஆட்சி இருக்கும்போது அந்த உணர்வு மேலோங்கி இருக்கும். இதுவே குரு நீச்சம் என்றால் கொஞ்சம் பின்தங்கியிருக்கும்.
ஒரு ராசிக்கு ஒரு குணம் என்பது அந்த ராசிதாரர் அனைவருக்கும் உண்டு. கிரக அமைப்புகளைப் பொறுத்து அந்த குணம் வேலை செய்யும். ஒரு சிலர் பிறக்கும்போதே தொலைநோக்கு சிந்தனையுடனேயே இருப்பார்கள். கிரக அமைப்புகள் பலவீனமாக இருக்கும்போது பிறந்தவர்கள் அப்போது மந்தமாக இருப்பார்கள். அவர்களது கிரக அமைப்பு நன்றாக இருக்கும்போது மேலோங்குவார்கள்.
நிச்சயமாக ஒரே ராசிக்காரர்களுக்கு ஒரே குணம் இருக்கும். சதவீத அளவில் வேண்டுமானால் மாறுபாடு இருக்கும்.