Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

துளசி இலையை சாப்பிட்டால் தாம்பத்தியம் பாதிக்கும் என்பது?

Advertiesment
துளசி இலையை சாப்பிட்டால் தாம்பத்தியம் பாதிக்கும் என்பது?
, திங்கள், 24 மார்ச் 2008 (15:37 IST)
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:

பிரசாதம் என்றால் கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். துளசியும் அதுபோலத்தான். கொஞ்சமாகச் சாப்பிட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது.

துளசி இலை சளியை கரைக்கும், உடல் சூட்டை கட்டுப்படுத்தும், மந்ததைத் போக்கும், ரத்தத்தை சுத்திகரிக்கும். நமது முன்னோர்கள் எல்லாம் ஆலயங்களில் எதைக் கொடுத்தாலும் பிரசாதம் என்று நாம் வாயில் போட்டுக் கொள்வோம் என்று தெரிந்துதான் இதுபோன்ற அரிய மூலிகைகளை பிரசாதமாகக் கொடுத்துள்ளனர்.

துளசி பெருமாளுக்கு உகந்தது. பச்சைக் கற்பூரத்தின் சுவை, நறுமணம் போன்றவைதான் துளசி இலையில் இருக்கும். பொதுவாக துளசியின் சாறை முகர்ந்தாலே மூக்கடைப்பு போன்றவை விலகும்.

துளசியின் மனம் பெருமாளுக்கு பிடித்தது. முக்கியமாக பார்த்தசாரதி பெருமாளுக்கு துளசி மாலை சார்த்துவது மிகவும் உகந்தது. ஏனெனில் அவர் ரணங்களுடன் இருந்தவர். அதுபோல சக்கரத்தாழ்வாருக்கும் துளசி மாலை சிறப்புதான். அவர் ஆயுதங்களுடன், அக்னி சொரூபமாக இருப்பவர். எனவே சாந்தப்படுத்தக் கூடிய சக்தி துளசிக்கு உண்டு.

அரச மர சுள்ளியை (அதாவது அரச மரத்தின் கிளையின் நுனிப்பகுதி நாளடைவில் காய்ந்து விழுவது) அதன் புகைக்கு நரம்புகளை முறுக்கேற்றும் தன்மை உண்டு.

நரம்பு தளர்ச்சி நோய் உள்ளவர்கள் நெருப்பில் அரச மர சுள்ளியைப் போட்டு அதன் புகையை சுவாசித்தாலே போதும். நரம்பு தளர்ச்சி நீங்கும். அரச மரத்திற்கு மின் ஆற்றலும் உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil