அச்சத்திற்கும், சந்தேகத்திற்கும் உரியவன் சனி. அஷ்டமத்து சனி, ஏழரை சனி நடக்கும்போது இதுபோன்ற பயம் ஏற்படும். பெரிய பெரிய ஞானியாக இருந்தாலும் சரி அவர்களுக்கு தங்களது ஞானத்தைப் பற்றிய சந்தேகம் வரும்.
அந்த அளவிற்கு சனி அவர்களை மாற்றி வைக்கும். மேலும் சனி திசை நடப்பவர்கள் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடப்பார்கள். ஏதோ தன்னை நோக்கி வருவது போலவும், தன்னை உரசிச் செல்வது போலவும் உணர்வார்கள்.
அதுபோன்றுதான் சின்ன சின்ன பிரச்சினை என்றாலும், ஏதோ பெரிய நோய் வந்துவிடுவதாக பயப்படுவதும். இதற்கு சனி தான் காரணம். வேறு ஒன்றும் இல்லை.